/* */

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் தொடக்கம்

பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் கவனமாக செல்லுமாறு நெல்லை மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் தொடக்கம்
X

நெல்லை மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன்

 

திருநெல்வேலி மாநகராட்சி சார்பாக வருகின்ற 12.07.2021 முதல் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் கவனமாக செல்லுமாறு மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணு சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சி சார்பாக மெசர்ஸ் லார்சன் ரூ டுப்ரோ கன்ஸ்ரக்ஷன்ஸ் லிட் மூலமாக வருகிற 12.07.2021 அன்று முதல் 19.07.2021 வரையும், இராமையன்பட்டி சாலை பேருந்து நிறுத்தம் முதல் இராஜபாளையம் நோக்கி செல்லும் சாலை வரையிலும், 12.07.2021 அன்று முதல் 19.07.2021 நயினார்குளம் சாலை முழுவதும் , 12.07.2021 அன்று முதல் 19.07.2021 சுத்தமல்லி பிரதான சாலை முதல் விஸ்வநாதநகர் வரையிலும், 12.07.2021 அன்று முதல் 25.07.2021 வரை தச்சநல்லூர் மதுரை சந்திப்பு சாலையிலிருந்து டவுண் நோக்கி செல்லும் சாலை முழுவதும், 12.07.2021 அன்று முதல் 25.07.2021 வரை சந்திமறித்தம்மன் கோவில் முதல் இராமையன்பட்டி செல்லும் சாலை முழுவதும், 12.07.2021 அன்று முதல் 10.08.2021 வரை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச் சாலையிலிருந்து மதுரை செல்லும் சாலை முதல் இந்தியா சிமெண்ட்ஸ் ஆபிசர்ஸ் காலனி வரையிலும், 12.07.2021 முதல் 19.08.2021 வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச் சாலையிலிருந்து மதுரை செல்லும் சாலை முதல் மதுரை சாலை இந்திராநகர் வரையிலும்,12.07.2021 முதல் 19.08.2021 வரை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச் சாலையிலிருந்து மதுரை செல்லும் சாலை முதல் இந்தியா சிமெண்ட்ஸ் ஆபிசர்ஸ் காலனி வரையிலும், 12.07.2021 அன்று முதல் 25.08.2021 வரை பேட்டை பழையபேட்டை இணைப்புச்சாலை இருந்து பழையபேட்டை மின்சாரவாரிய அலுவலக சாலை வரையிலும், 12.07.2021 அன்று முதல் 28.08.2021 வரை டவுண் ஆர்ச்சில் இருந்து அருணகிரி தியேட்டர் செல்லும் சாலை முழுவதும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற உள்ளது.

மேற்கண்ட இடங்களில் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற இருப்பதால் மேற்கண்ட தினங்களில் பொதுமக்கள் அச்சாலையினை கடந்து செல்லும் போது மிகவும் கவனமாக செல்லுமாறு மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணு சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 10 July 2021 2:40 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மனதை நொறுக்கிய MI ! "7 தொடர் தோல்விகள்" !#mi #mumbaiindians...
  2. வீடியோ
    கோடை விடுமுறை கொடைக்கானலில் குவிந்த மக்கள் !#summer #holiday #vacation...
  3. வீடியோ
    Happy Birthday Ajithkumar 🥳🎂 !#ajithkumar #ajith #happybirthday...
  4. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  5. நாமக்கல்
    குரு பெயர்ச்சியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்ப
  6. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  7. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  10. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி