/* */

நெல்லையில் கைது செய்யப்பட்ட கனிம துறை உதவி இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி

நெல்லையில் மணல் கடத்திய வழக்கு சம்பந்தமாக கனிமவள துறை உதவி இயக்குநர் சபியா என்ற பெண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

நெல்லையில் கைது செய்யப்பட்ட கனிம துறை உதவி இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி
X

போலீசாரால் கைது செய்யப்பட்ட கனிமவள துறை உதவி இயக்குநர் சபியா.

நெல்லையில் கைது செய்யப்பட்ட கனிம துறை உதவி இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி. சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட ஊட்டி கனிமவளத்துறை உதவி இயக்குனரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளதால் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊட்டியில் கனிமவள துறை உதவி இயக்குநராக பணியாற்றும் சபியா என்ற பெண் அதிகாரியை நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் நெல்லையில் கைது செய்து விசாரணை நடத்தினர்.

கடந்த 2019 ம் ஆண்டு நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் எம் சாண்ட் நிறுவனம் நடத்துவதாக கூறி கேரளாவுக்கு சட்டத்திற்குப் புறம்பாக மணல் கடத்திய வழக்கு சம்பந்தமாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கனிம வளத்துறை அதிகாரி மருத்துவ பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு உடலில் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதினால் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On: 11 April 2022 2:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்