/* */

நெல்லை அருகே அடிக்கடி விபத்து ஏற்படுவதால் மாற்று பாதை கோரி சாலை மறியல்

நெல்லை அருகே அடிக்கடி விபத்து ஏற்படுவதால் மாற்று பாதை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

நெல்லை அருகே அடிக்கடி விபத்து ஏற்படுவதால் மாற்று பாதை கோரி சாலை மறியல்
X

நெல்லை அருகே மாற்றுப்பாதை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

நெல்லை மாவட்டம் மணப்படை வீடு அருகே சென்னை டூ கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள பொட்டல், கீழநத்தம், மணப்படை வீடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கல்வி, வேலை மற்றும் பிற தேவைகளுக்காக அன்றாடம் இந்த நான்கு வழிச் சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழப்பதால் தங்களுக்கு மாற்று பாதை அமைத்து தர வேண்டும் என்று கடந்த பத்து ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

குறிப்பாக சமீபத்தில் கூட இங்கு ஏற்பட்ட விபத்தில் சுடலையாண்டி என்பவர் உயிரிழந்தார். இந்த நிலையில், பத்து ஆண்டுகளாக போராடியும் செவி சாய்க்காத அரசை கண்டித்து மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று திடீரென நான்கு வழி சாலையில் சாலை மறியலில் ஈடுபட ஒட்டுமொத்தமாக திரண்டனர். பெண்கள், குழந்தைகள் என 200க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சென்ற பாளையங்கோட்டை காவல் துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் சிலர் போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்காமல் சாலையின் நடுவே நின்று கோஷம் எழுப்பவே போலீசார் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இருப்பினும் சாலை ஓரமாக நின்றபடி பொதுமக்கள் கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில் நான்கு வழிச்சாலையை கடப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே இங்கு குளத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் உட்புறமாக மாற்று பாதை அமைத்து தரும்படி 10 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இருப்பினும் அரசு நடவடிக்கை எடுக்காத்தை கண்டித்து தான் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அரசு உடனடியாக எங்களுக்கு மாற்றுப் பாதை அமைத்து தர வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றதால் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.

Updated On: 25 Jan 2022 11:04 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!