/* */

நெல்லை ராயல் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனான சேபாக் சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது

Today Cricket News in Tamil -நெல்லை ராயல் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனான சேபாக் சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது

HIGHLIGHTS

நெல்லை ராயல் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனான சேபாக் சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது
X

Today Cricket News in Tamil -சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனான சேபாக் சூப்பர் கிங்ஸ் அணியை முதல் போட்டியில் வீழ்த்தியது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள். திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம், கோவை ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறுகிறது. முதல் 6 போட்டிகள் திருநெல்வேலியில் உள்ள சங்கர்நகர் விளையாட்டு மைதானத்தில் இன்று துவங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான செபாக் சூப்பர் கில்லீஸ் -- நெல்லை ராயல் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு, 184 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியை சேர்ந்த சஞ்சய் யாதவ் 87 ரன்கள் எடுத்தார்.

185 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சேபாக் கில்லீஸ் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆட்டத்தின் போக்கை கௌசிக் காந்தி மாற்றினார். அவர் 64 ரன்கள் எடுத்தார். இறுதியில் செபாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து, 184 ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 14 ரன்கள் எடுத்தனர். இதனால் ஆட்டம் டிரா ஆனது. இதனையடுத்து சூப்பர் ஓவர் மூலம் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. முதலில் பேட் செய்த சேபாக் சூப்பர் கில்லீஸ் 6 பந்துகளில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்தனர். மீண்டும் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.இதன் மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனான சேபாக் சூப்பர் கில்லிஸ் அணியை வென்றுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Jun 2022 10:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  3. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  5. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  6. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  7. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  8. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  9. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  10. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?