/* */

நெல்லை வரதராஜ பெருமாள் கோவிலில் குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா

நெல்லை, மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவில், சுவாமி குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.

HIGHLIGHTS

நெல்லை வரதராஜ பெருமாள் கோவிலில்  குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா
X

மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவில், குதிரை வாகனத்தில் எழுந்தருளிய ஸ்வாமி. 

நெல்லை மாவட்டத்தில், பழமையான வைணவ ஸ்தலங்களில் ஒன்றாக, நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திகழ்கிறது. இங்கு, சித்திரை பிரம்மோற்சவ திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த 11 நாட்களாக நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, 8ம் திருநாள் சுவாமி குதிரை வாகன புறப்பாடு, நேற்று வெகு விமர்சியாக நடைபெற்றது. இதை முன்னிட்டு, கோவில்நடை நேற்று அதிகாலை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலை பூஜையும், காலையில் வெள்ளிப் பல்லக்கில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.

தொடர்ந்து மாலையில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு சுவாமி வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சுவாமி திருவீதி உலா, தேர் கடாக்ஷம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 4 ரத வீதிகள் வழியாக சுவாமி புறப்பாடு நடைபெற்று மீண்டும் திருக்கோவில் வந்தடைந்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 23 April 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  4. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  5. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  6. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  7. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  8. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  9. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!