/* */

பெண்களை இழிவாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் ராசா எம்.பி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

பெண்களை இழிவாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
X

நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் ஆ. ராசா எம்.பி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்து பெண்கள், தாய்மார்களை விபச்சாரி என்று இழிவாக பேசிய தி.மு.க. அரசின் துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி எம். பி. யுமான ஆ. ராசாவை கண்டித்து நெல்லையில் இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் மாரியப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது காரில் ஆ. ராசாவின் உருவப் பொம்மையை மறைத்து வைத்திருந்ததை அறிந்த காவல்துறையினர் உருவ பொம்மையை பறித்தனர். இதனால் இந்து மக்கள் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து இந்து மக்கள் கட்சியினர் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆ ராசாவை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

நெல்லை மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பாக இளைஞரணி தலைவர் எஸ்.பி. ரமேஷ், சிறப்பு அழைப்பாளர் டி. கே. பி. ராஜா பாண்டியன், தென் மண்டல தலைவர் மாநில செயலாளர் முருகானந்தம், மாவட்டச் செயலாளர் லட்சுமணன், சட்டமன்ற தொகுதி தலைவர் பாக்கியசாமி எஸ். எம். கணேச பாண்டியன், ராம், பச்சையப்பன், சுடலைமணி, நாராயணன், ஆறுமுககுமார், உத்தமராமன், பசுபதி, மணிகண்டன், செல்வம், மாடசாமி, பாண்டி, இளையராஜா மற்றும் இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Sep 2022 7:50 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் மோடியின் பேச்சை கண்டித்து மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி...
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  8. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  9. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?