/* */

திருநெல்வேலியில் காலநிலை மாற்றம், உலக வெப்பமயமால் குறித்தும் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலியில் காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளவும், உலக வெப்பமயமாதலை தனித்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருநெல்வேலியில் காலநிலை மாற்றம், உலக வெப்பமயமால் குறித்தும் ஆலோசனைக் கூட்டம்
X

காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளவும், உலக வெப்பமயமாதலை தனித்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு, தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளவும், உலக வெப்பமயமாதலை தனித்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்கள், சமூக ஆர்வலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தெரிவித்ததாவது:-

தமிழகத்தை காலநிலை சீர்மிகு மாநிலமாக மாற்றுவதற்கான தொலைநோக்கு பார்வையுடன் தமிழ்நாடு பருவநிலை மாற்றம் இயக்கத்தை முதன்முதலாக அமைத்து அதன் கீழ் காலநிலை மாற்றம் தழுவல் மற்றும் கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம் ஏற்படுத்தி உத்தரவிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் தலைவராகவும், மாவட்ட வன அலுவலர் இவ்வியக்கத்தின் காலநிலை மாற்ற அலுவலராகவும் உள்ளார்.

தமிழகத்தின் வனப்பரப்பினை 23.6% லிருந்து 33% சதவிகிதமாக அதிகரித்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பாண்டில் கல்வி நிலையங்கள், அரசுத்துறைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலமாக மரம் நாற்றாங்கால்கள் அமைத்திடவும் 10 இலட்சம் மரக்கன்றுகள் பயிரிட்டு வளர்க்கவும், அவற்றை ஜியோ டேக் முறையில் பதிவேற்றம் செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மரங்கள் நட்டு பராமரிக்க ஆர்வமுள்ளவர்கள், தன்னார்வலர்கள், மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீசெல்லையா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர்ரிஷப் , உதவி வன பாதுகாவலர்ராதை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையர்) எம்.சுகன்யா, திருநெல்வேலி கோட்டாட்சியர் சந்திரசேகர், வட்டாட்சியர் (பேரிடர் மேலான்மை) செல்வம், பேராசிரியர் விஸ்வநாதன், உதவி பேராசிரியர் இராமநாதன், அட்ரி மதிவாணன், நெல்லை நேட்சர் கிளப் அமரவேல்பாபு, நெல்லை பை சைக்கிள் சுல்தான் மற்றும் அரசு அலுவலர்கள், தன்னார்வ அமைப்புகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 July 2022 2:05 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  5. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  7. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  8. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  9. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  10. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு