/* */

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியர்

தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையினை பயன்படுத்தி மீன்பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, நெல்லை ஆட்சியர் விஷ்ணு எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியர்
X

ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு

இது தொடர்பாக, நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் மற்றும் விதிகள் 1983-ன்படி கடலில் சுருக்குமடி வலையினை பயன்படுத்தி மீன்பிடிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே திருநெல்வேலி மாவட்ட கடலோர மீனவ கிராமங்களான கூடுதாழை முதல், கூட்டப்புளி வரையுள்ள 7 மீனவ கிராமங்களில், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையோ அல்லது அதனைச் சார்ந்த வளையமுள்ள வீச்சுவலையினை பயன்படுத்தியோ மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது என இதன் மூலம் தெரிவிக்கலாகிறது.

தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகள் பொது இடங்களிலோ / இல்லத்திலோ / மீன்பிடி கலனில் இருந்தால் பறிமுதல் செய்யப்படும். மேலும் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தால் மீனவர்களின் வள்ளம், வலை மற்றும் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Updated On: 20 Jan 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  2. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  5. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  7. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  8. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  9. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...