/* */

நெல்லையில் வரி செலுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

நெல்லையில் வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை ஆட்சியர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

நெல்லையில் வரி செலுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
X

நெல்லையில் வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை ஆட்சியர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையிலும், வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் திருநெல்வேலியில் பத்து கிலோ மீட்டர் சைக்கிள் பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கொடியசைத்து சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வரி செலுத்துவது தொடர்பாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பதாகைகளை வைத்தபடி சென்றனர்.

சுதந்திர இந்தியாவின் 75 ஆம் ஆண்டை போற்றும் வகையிலும், சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களை நினைவு கூரும் வகையிலும், வழி செலுத்துவோரை பாராட்டும் வகையிலும், பொதுமக்களிடையே வரி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி திருநெல்வேலியில் நடைபெற்றது. 10 கிலோ மீட்டர் தூரத்திற்கான இந்த சைக்கிள் பேரணியை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கொடியசைத்து துவக்கி வைத்தார். வருமான வரித்துறை சார்பில் திருநெல்வேலி பன்நோக்கு மருத்துவமனை முன்பு துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய பகுதிகளான மகாராஜா நகர், பெருமாள்புரம், என்ஜிஓ காலனி, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், கட்டபொம்மன் சிலை அருகே நிறைவடைந்தது.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் வரி செலுத்துவது குற்றமாகாது வரி செலுத்துவது பொது மக்களின் கடமை, தண்டனை அல்ல உள்ளிட்ட வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதாகைகளை வைத்தபடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். வருமான வரித்துறை அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.

Updated On: 23 April 2022 3:33 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...