/* */

தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்

நெல்லை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன் தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
X

நெல்லையில் தேர்தல் பார்வையாளர் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டம்

நெல்லை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, போலீஸ் எஸ்.பி. மணிவண்ணன் முன்னிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஓட்டு பதிவிற்காக 1188 ஓட்டு பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்ட தேர்தல் நடக்கும் ஓட்டுச்சாவடிகளில் 182ம், 2ம் கட்ட தேர்தல் நடக்கும் ஓட்டுச்சாவடிகளில் 151 ஓட்டுச்சாவடிகள் பதட்டமான ஓட்டுச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் போதுமான போலீஸ் துறை பாதுகாப்பு, வீடியோ பதிவுகள், மற்றும் மைக்ரோ அப்சர்வர்கள், வெப்சைட் கண்காணிப்பு, போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

முதல்கட்ட தேர்தலுக்கு 5035 ஓட்டுப்பதிவு அலுவலர்களும், 2ஆம் கட்ட தேர்தலுக்கு 4521 ஓட்டுப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஓட்டுப்பதிவு நடக்கிறது. கடந்த 14ஆம் தேதி முதல் தேர்தல் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டு மூன்று ஷிப்ட் அடிப்படையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. பொதுமக்கள் தங்கள் குறைகளை இலவச தொலைபேசி எண் 18004258373 மற்றும் வாட்ஸ்அப் எண் 7402608438 ல் தெரிவிக்கலாம்.

அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் அந்தந்த பஞ்சாயத்து யூனியன்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மண்டல அலுவலர்கள் மூலம் அடிப்படை வசதிகளான மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாலை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

9 பஞ்சாயத்து யூனியன்களில் வாக்காளர்களுக்கு ஓட்டுச்சாவடி விபரம் குறித்த சீட்டுகள் வரும் 29-ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்கப்படும். 9 ஓட்டு எண்ணும் மையங்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது. போலீஸ் துறையின் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தலில் பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கு படிவம் 15 வரும் 30-ஆம் தேதிக்குள் வழங்கப்பட்டு வரும் அக்டோபர் 3-ம் தேதிக்குள் தபால் ஓட்டுகளை சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன்களில் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் டிஆர்ஓ பெருமாள், திட்ட இயக்குனர் பழனி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி, பஞ்சாயத்துக்களின் உதவி இயக்குனர் அருணாச்சலம், மகளிர் திட்ட அலுவலர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராம் லால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Sep 2021 7:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  2. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  3. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  4. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  5. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  6. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  8. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  9. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!