/* */

நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்த 2 பேரை கைது செய்த போலீஸார்

நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவில் போலி ஆவணங்களை கொடுத்ததாக நெல்லையை சார்ந்த 2 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு கைது செய்தனர்

HIGHLIGHTS

நீதிமன்றத்தில்  போலி ஆவணங்கள் தாக்கல் செய்த 2 பேரை  கைது செய்த போலீஸார்
X

நெல்லை மாவட்டம் காவல்கிணறு சோதனைச் சாவடி அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி ராதாபுரம் மண்டல துணை தாசில்தார் பேட்டரி சிலுவை அந்தோணி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார், அப்போது கேரளா பதிவு எண் கொண்ட லாரியில் முறையான அனுமதி சீட்டு இன்றி 5 யூனிட்டுகள் கொண்டு செல்வது தெரியவந்தது. இதனை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து பணகுடி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

லாரியை விடுவிக்கக்கோரி வள்ளியூர் கோர்ட்டில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி நடந்த வழக்கு விசாரணையில் மனுதாரர் சார்பில் அஜித் என்பவர் நெல்லை டவுனை சேர்ந்த ஷேக் அலி மற்றும் நெல்லை கீழநத்தத்தை சேர்ந்த முருகன் ஆகிய இருவரின் பிரமாண பத்திரம் மூலம் ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதனை நீதிபதி பிரசாத் விசாரித்தபோது ஜாமீன் சான்று மீது சந்தேகம் அடைந்து ஜாமீன் பத்திர சான்று உண்மை தன்மை ஆராய நெல்லை தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிக்கு அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாங்கள் இந்த ஜாமீன் வழங்கவில்லை என்று அறிக்கை சமர்ப்பித்தனர் செய்து நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார் இதனையடுத்து நீதிமன்ற தலைமை எழுத்தர் மகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் ஷேக் அலி முருகன் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Updated On: 3 Feb 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை