/* */

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தின இணையவழி தொடர் சொற்பொழிவு

அரசு அருங்காட்சியகத்தில் 75வது சுதந்திர தின சொற்பொழிவில் தமிழகத்தில் மகாத்மா காந்தி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றப்பட்டது.

HIGHLIGHTS

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தின இணையவழி தொடர் சொற்பொழிவு
X

சுதந்திர தின இணையவழி தொடர் சொற்பொழிவில் புதுடில்லி தேசிய காந்தி அருங்காட்சியகம் இயக்குனர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார்.

நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றாக கல்வி வளர்ச்சி நாளான இன்று முதல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு சிறப்பு இணையவழி சொற்பொழிவு நடத்த திட்டமிட்டு நடைபெற்றது. இந்நிகழ்வில் நெல்லை அரசு அருங்காட்சியத்துடன் இணைந்து மதுரை, திருவாரூர் அரசு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்றுத் துறை, அரசு கலைக்கல்லூரி மேலூர், மதுரை இணைந்து இந்த சொற்பொழிவினை நடத்துகின்றனர்.

இன்றைய துவக்க நிகழ்வின் சிறப்புரையாக புதுடில்லி தேசிய காந்தி அருங்காட்சியகம் இயக்குனர் அண்ணாமலை சிறப்புரை கூறியதாவது:

"தமிழகத்தில் மகாத்மா காந்தி" என்கிற தலைப்பில், 1896 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி முதல் முறையாக தமிழகம் வந்தது முதல் 1946 வரை ஏறக்குறைய 20 தடவை தமிழகத்திற்கு மகாத்மா காந்தி வருகை புரிந்துள்ளார். மேலும் மகாத்மா காந்தி தமிழர்களை பற்றியும், தமிழகத்திற்கு வருகை புரிந்த போது தமிழர்களை தான் சந்தித்த போது என் உடன் பிறந்தவர்களை சந்திப்பது போன்று உணர்ந்தேன் என்றும், எத்தனையோ ஆண்டுகளாக நான் போற்றி வளர்த்து வந்துள்ள உள்ளத்தின் உணர்ச்சி இது.

அதற்கான காரணம் மிக எளிமை. இந்தியர்களிடையே உள்ள பல்வேறு பிரிவினரில், போராட்டத்தில் கடுமையை தாங்கியவர்கள் தமிழர்கள் தான். சத்தியாகிரகத்தில் உயிர் தியாகம் செய்தவர்கள் மிக அதிகமான பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சிறைக்கு செல்ல வேண்டி இருந்த போதும் தமிழர்களே அதை செய்தனர் என்று தமிழர்களை பற்றி உணர்ச்சி ததும்ப பேசிய தகவல்களையும் பகிர்ந்தார்.

மேலும் தமிழகத்தில் மகாத்மா காந்தி சென்ற இடங்களுக்கு தான் சென்று அவ்விடங்களில் ஏற்பட்ட சுவாரஸ்யமான பல்வேறு தகவல்களை எடுத்துரைத்தார். மகாத்மா காந்தியின் அரிய பல புகைப்படங்களை அனைவருக்கும் பகிர்ந்தார். இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி நன்றியுரை வழங்கினார்.

Updated On: 22 July 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்