/* */

சவுரியா சக்ரா விருது பெற்ற மறைந்த இராணுவ வீரர் மனைவியை கலெக்டர் விஷ்ணு கௌரவித்தார்

1971ம் ஆண்டு சவுரியா சக்ரா விருது பெற்ற முன்னாள் இராணுவ வீரர் ராமமூர்த்தியின் மனைவி ரெங்கா அவர்களை கலெக்டர் விஷ்ணு கௌரவித்தார்

HIGHLIGHTS

சவுரியா சக்ரா விருது பெற்ற மறைந்த இராணுவ வீரர் மனைவியை  கலெக்டர் விஷ்ணு கௌரவித்தார்
X

வி.ராமமூர்த்தியின் திருவுருவப்படத்திற்கு கலெக்டர் வே.விஷ்ணு,  கர்னல் ரவிக்குமார்  ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

மாண்புமிகு முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் வி.வி.கிரி அவர்களிடமிருந்து, 1971 ஆம் ஆண்டு சவ்ரா சக்ரா விருது பெற்ற பாளையங்கோட்டை சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர் வி.ராமமூர்த்தியின் மனைவி ரெங்கா ராமமூர்த்தி அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு, கர்ணல் ரவிக்குமார் ஆகியோர் கௌரவித்தார்கள்.

ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இந்திய இராணுவத்தில் உயரிய விருதுகள் பெற்றவர்களை அழைத்து மண்டல வாரியாக கௌரவிக்குமாறு இந்திய அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சவ்ரா சக்ரா விருது பெற்ற முன்னாள் இராணுவ வீரர் வி.ராமமூர்த்தி அவர்களின் மனைவி ரெங்காராமமூர்த்தி அவர்களை அழைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.விஷ்ணு , கர்ணல் ரவிக்குமார் ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தனர். ரூ.1 லட்சத்திற்கான கௌரவ நிதியினை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்கள்.

முன்னதாக வி.ராமமூர்த்தியின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு. கர்ணல் ரவிக்குமார் மற்றும் இராணுவ வீரர் மனைவி ரெங்காராமமூர்த்தி ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சேர்ந்த மறைந்த இராணுவ வீரர் ராமமூர்த்தி மீசோகில்ஸ் என்ற பகுதியில் இராணுவ செயற் பொறியாளராக தனக்கு ஒதுக்கப்பட்ட பணியினை பல்வேறு இடர்பாடுகளிலும், எதிரிகளின் அச்சுறுத்தல்களையும் மீறி போர் நடைபெறும் பொழுது உயிரினை பொருட்படுத்தாமல் தனது பணியினை பல்வேறு இன்னல்களுக்கும் இடையில் சிறப்பாக பணியாற்றியமைக்கு இந்திய இராணுவத்தில் சார்பாக சவ்ரா சக்ரா விருது அறிவிக்கப்பட்டு, மாண்புமிகு முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் வி.வி.கிரி அவர்களால், 1971 ஆம் ஆண்டு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். விருது பெற்ற இராணுவ வீரர் வி.ராமமூர்த்தி 2017 ஆம் ஆண்டு மரணமடைந்தார்கள்.

பின்னர் மறைந்த முன்னாள் இராணுவ வீரர் வி.ராமமூர்த்தி மனைவி ரெங்காராமமூர்த்திக்கு இந்திய ராணுவத்திலிருந்து வழங்கிய ரூ.1 இலட்சத்திற்கான கௌரவ நிதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணுயிடம் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார்.

நிகழ்ச்சியில் 9 சிக்னல் கமாண்டிங் அதிகாரி கர்ணல் அகிஷா, 5 பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி கர்ணல் திணேஷ், 5 பட்டாலியன் ஆடம் அதிகாரி லெப்டினல் கர்ணல் நிதிஷ்குமார், 3 மகளிர் பட்டாலியன் அதிகாரி லெப்டினல் கர்ணல் தன்வார், தூய யோவான் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜான்கென்னடி, தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினல் டாக்டர் டி.கே.ஸ்டேன்லி டேவிட், பாளையங்கோட்டை வட்டாட்சியர் ஆவுடையப்பன், தேசிய மாணவர் படை வீரர்கள், உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Aug 2021 3:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  3. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  4. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  6. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  7. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!
  8. லைஃப்ஸ்டைல்
    நாமெல்லாம் மாஸ்.... தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!