/* */

நெல்லையில் அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்: முன்னாள் அமைச்சர் வளர்மதி பங்கேற்பு

இட ஒதுக்கீடு என்பது அதிமுகவில் மகளிருக்கு ஜெயலலிதா இருந்த போது வழங்கப்பட்ட நடைமுறையை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

நெல்லையில் அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்: முன்னாள் அமைச்சர் வளர்மதி பங்கேற்பு
X

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நெல்லை மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

மூன்று மாத திமுக ஆட்சியின் செயல்பாடு உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும். மக்கள் தக்க பதிலடியை திமுகவிற்கு தருவார்கள் என நெல்லையில் அதிமுக மாநில மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி பேட்டியில் தெரிவித்தார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நெல்லை மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிர் அணி செயலாளருமான வளர்மதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா, மாவட்ட மகளிரணி செயலாளர் ஜான்சிராணி முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மகளிர் அணி நிர்வாகிகள் செயல்பட வேண்டிய விதம், பொறுப்பாளர்கள் நியமனம் போன்ற பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியதாவது:-

நெல்லை மாவட்ட மகளிர் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய, நகர, மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தலில் எப்படி செயல்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை தந்த திமுகவினர் மறுபடியும் இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் பொய்யான வாக்குறுதி தருவார்கள். அதை மக்கள் ஏமாற வேண்டாம் என்பதை மக்களை சந்தித்து வீடுவீடாக சென்று ஒரு திண்ணைப் பிரச்சாரம் செய்வதை போல செல்லுகின்ற பகுதிகளில் எல்லாம் திமுகவினர் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புரட்சித்தலைவி ஜெயலலிதா இருக்கும் போதே சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும், உள்ளாட்சியில் கழக அமைப்பு ரீதியான அனைத்து பகுதிகளிலும் பெண்களுக்கு மிக மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மட்டும்தான்.

இட ஒதுக்கீடு என்பது அதிமுகவில் மகளிர்க்கு ஏற்கனவே ஜெயலலிதா இருந்த போது வழங்கப்பட்ட நடைமுறையை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. திமுகவை சார்ந்தவர்கள் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு சம்பவங்களை பார்க்கும் போது மக்களுக்கு தெளிவாக புரியும். எல்லாவற்றிலும் காழ்புணர்ச்சி உடன் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது வழக்குப் போடுவதாக இருந்தாலும் சரி, பொய்யான வழக்குகளை ஜோடிப்பதாக இருந்தாலும் சரி அனைத்து பிரச்சினைகளிலும் கால் புணர்ச்சி. அதுதான் இப்போது செயல்பட்டு கொண்டிருக்கிற அரசு. அதிமுகவை அடக்கி ஒடுக்குவது இதுபோன்ற நிலைப்பாடுகளை திமுக அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் எந்த நிலைபாடுகளை எடுத்தாலும் அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. திமுகவைப் பொறுத்தவரை எப்போதுமே ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் ஒரு பேச்சும், ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு ஒரு பேச்சும் பேசுவார்கள். திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கஜானாவை காலி செய்து விட்டு போய் விட்டார்கள், நிதி பற்றாக்குறை என்று சொல்வார்கள். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வருகிற போது அதை நிறைவேற்றவில்லை இதை நிறைவேற்ற வில்லை என்று நீதிமன்றத்துக்குப் போவார்கள். இல்லை என்றால் போராட்டம் நடத்துவார்கள். இது திமுகவுக்கு வாடிக்கையான பழக்கம் தான்.

திமுக நிலைப்பாடுகளை மாற்றி மாற்றி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்பு என்பது அதிமுக தான் வெற்றிபெறும். காரணம் மக்கள் ரொம்ப அதிர்ச்சியில் இருக்கின்றனர். திமுக கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை. சொன்னது ஒன்று செய்தது ஓன்று. திமுக வாக்குறுதியில் அதைத் தருகிறேன், இதைத் தருகிறேன், அதை ரத்து பண்ணுகிறேன் என்று எதையுமே செய்யவில்லை. மக்கள் இதனைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல் திமுகவின் பொய் எடுபடாது. உள்ளாட்சித் தேர்தலில் அதன் எதிரொலி நிச்சயமாக இருக்கும். இந்த மூன்று மாத கால திமுகவின் செயல்பாடுகளுக்கு மக்கள் பதிலடியை தருவார்கள்.

Updated On: 26 Aug 2021 2:44 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  2. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  3. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  4. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  5. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  6. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  7. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  8. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  9. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  10. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்