/* */

நெல்லை-கள்ளச்சாராயம் காய்ச்சிய ஒருவர் கைது.தப்பிய இருவருக்கு போலீசார் வலை

நாங்குநேரியில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது.5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துஇருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

நெல்லை-கள்ளச்சாராயம் காய்ச்சிய ஒருவர் கைது.தப்பிய இருவருக்கு போலீசார் வலை
X

கள்ளச்சாராயம் காய்ச்சிய இடத்திற்கு சென்ற டிஎஸ்பி.,ஸ்ரீ லிசா ஸ்டெபல்லாதெரஸ்  

நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய ஒருவரை கைது செய்த போலீசார் அங்கிருந்து 5 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி வயற்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து சம்பவத்தன்று நான்குநேரி டிஎஸ்பி., ஸ்ரீ லிசா ஸ்டெபல்லாதெரஸ் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்த போது அங்கு மூன்று பேர் கள்ளச்சாராயம் காய்ச்சிய தெரியவந்தது.

உடனடியாக அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது மூவரும் தப்பியோடிய நிலையில் ஒருவர் மட்டும் போலீசார் பிடித்தனர். மேலும் அங்கு கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக வைக்கப்பட்டிருந்த 20 லிட்டர் சாராய ஊறல்களை அழித்தனர். தொடர்ந்து அவர்கள் காய்ச்சிய 5 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்ததை தொடர்ந்து பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தியதில். அவர் நான்குநேரியை சேர்ந்த நம்பி ராஜன்(30) என்பதும் தப்பியோடிய வர்கள் நான்குநேரியை சேர்ந்த கொம்பையா, மற்றும் பொன்குமார் என்பது தெரிய வந்தது.

நம்பிராஜனை நான்குநேரி போலீசில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து நான்குநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரை தேடி வருகின்றனர்.




____________________________

நாங்குநேரி வட்டாரத்தில் கிராமங்கள் தோறும் தடுப்பூசி முகாம்.

நாங்குநேரி ஜூன் 6-

நான்குநேரி வட்டாரத்தில் கிராமங்கள் தோறும் தடுப்பூசி முகாம் தீவிரமாக நடந்து வருகிறது.

கொரானா வைரஸ் தாக்கம் கிராமப்புறங்களில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது முதல் அலையை விட தற்போது உயிரிழப்புகள் அதிகமாகி வருகின்றன இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்நிலையில் நான்குநேரி வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் பரவலை தடுக்கும் வகையில்

நேற்று மறுகால் குறிச்சி கிராமத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் நான்குநேரி தாசில்தார் இசக்கி பாண்டி முகாமை துவக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் குருநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை போட்டனர். மேலும் தொற்று கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இம்முகாமில் கபசுர குடிநீர் முக கவசம் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

பட விளக்கம்.

நான்குநேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

Updated On: 5 Jun 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  3. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  4. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  5. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...
  6. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  7. குமாரபாளையம்
    நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!
  8. ஈரோடு
    ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  10. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...