/* */

நிரந்தர பணி வழங்க கோரி நர்சிங் மாணவிகள் திருச்சி கலெக்டரிடம் மனு

நிரந்தர பணி வழங்க வேண்டி நர்சிங் மாணவிகள் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

HIGHLIGHTS

நிரந்தர பணி வழங்க கோரி நர்சிங் மாணவிகள் திருச்சி  கலெக்டரிடம் மனு
X
நிரந்தர வேலை கேட்டு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நர்சிங் மாணவிகள் மனு கொடுத்தனர்.

பல்நோக்கு பணியாளராக கோவிட்-19 கொரோனா நோய் தடுப்பு பணி ஆற்றிய ஒப்பந்தப் பணியாளர்கள் நிரந்தர பணி வழங்கக்கோரி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நர்சிங் அசிஸ்டன்ட் அசோசியேஷன் சங்க செயலாளர் ஆமூர்.சுரேஷ்ராஜா தலைமையில் கலெக்டர் சிவராசுவிடம் கோரிக்கை மனு கொடுக்க வந்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது[-

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பல்நோக்கு பணியாளராக (கோவிட்-19) கொரோனா நோய் தடுப்பு பணிக்காக கடந்த ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என கடந்த 11 மாதங்களாக தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்டோம்.

கொரோனா நோய் தொற்று பரவும் காலகட்டத்தில் எங்களின் குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி, எங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பல்நோக்கு பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தோம். தற்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்ததையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக எங்களை பணியிலிருந்து நீக்கிவிட்டனர்.

மேலும் மூன்றாம் அலை வந்தால் மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்திக் கொள்கிறோம் என அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துவிட்டது. தற்போது எங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக வாழ்வாதாரம் இழந்து வேலை இல்லாமல் இருக்கிறோம். எங்களுக்கு தமிழக அரசும் மாவட்ட கலெக்டரும், நிரந்தர பணி வழங்கி எங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Updated On: 29 Sep 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  4. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  6. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  7. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  8. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  9. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  10. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்