/* */

கிராமசபை கூட்டம்: திருச்சி கலெக்டருக்கு சமூக நீதி பேரவை வேண்டுகோள்

கிராமசபை கூட்டம் தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டருக்கு சமூக நீதி பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

HIGHLIGHTS

கிராமசபை கூட்டம்: திருச்சி  கலெக்டருக்கு சமூக நீதி பேரவை வேண்டுகோள்
X
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த சமூக நீதி பேரவை நிர்வாகிகள்.

தமிழ்நாடு சமூக நீதி பேரவை திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 6(3) -ன் படி கிராம சபை கூட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் கூட்ட வேண்டும். தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 46(1)(a) ன் படி கிராம சபை கூட்டத்தை கூட்டுவது ஊராட்சி மன்ற தலைவரின் அலுவல் ஆகும். இதற்காக ஊராட்சி மன்ற தலைவருக்கு மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.

கிராம சபை கூட்டம் தொடர்பான அறிவிப்பு, கிராம சபை கூட்டம் கூடுவதற்கு 7 நாட்களுக்கு முன்னதாக பொதுமக்களுக்கு கிராம ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட வேண்டும். துண்டு பிரசுரங்கள்,பிளக்ஸ் பேனர், தண்டோரா போன்ற வகைகளில் கிராம சேவை தொடர்பான கூட்ட அழைப்பு பொதுமக்களுக்கு கிராம ஊராட்சி மூலமாக வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் மற்றும் விதிகள் அரசாணைகள் மூலமாக ஊராட்சியின் செயல் அலுவலரான ஊராட்சி மன்ற தலைவர் பணியாகும். ஆனால் திருச்சி மாவட்டத்தில் இந்த நிமிடம் வரை ஊராட்சி மன்ற தலைவர் யாரும் கிராம சபை கூட்ட அறிவிப்பினை பொதுமக்களுக்கு வெளியிட_வில்லை

வருகின்ற மே 1 கிராம சபை கூட்டம் நடைபெற இருப்பதால் 7 நாட்களுக்கு முன்னதாகவே கூட்ட அறிவிப்பு கொடுக்க வேண்டும். கிராம சபையில் வைக்கப்பட வேண்டிய வரவு செலவு விவரங்கள், தணிக்கை அறிக்கைகள்,திட்ட அறிக்கைகள் போன்ற ஊராட்சியின் அனைத்து ஆவணங்களையும் முறைப்படுத்தி மக்கள் பார்வைக்கு கட்டாயமாக வைக்க வேண்டுமென ஊராட்சி தலைவருக்கும் ஊராட்சி செயலருக்கும் அதனை உறுதிப்படுத்த பற்றாளருக்கும் அறிவுறுத்த வேண்டுகிறோம்.

கிராம ஊராட்சி தலைவருக்கு, ஊராட்சியில் தலைவர் என்ற பொறுப்போடு செயல் அலுவலர் என்ற பொறுப்பையும் வழங்கியுள்ளது. ஆனால் பெண் பிரதிநிதிகள் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் கணவர், சகோதரர், தந்தை அல்லது உறவினர்களின் குறுக்கீடுகள் அதிக அளவில் உள்ளது.

இது போன்ற நிகழ்வுகள் சட்டத்திற்குப் புறம்பானதாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 73வது சட்ட திருத்தம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்1994 ன் படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள அதிகார பகிர்வுகளை அவமதிக்கும் செயலாகும். எனவே பெண் ஊராட்சி தலைவர்கள் மற்றும் பெண் பிரதிநிதிகளின் உறவினர்கள், தலையீடு இல்லாமல் இருக்க கிராம ஊராட்சிகளுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமித்து, கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

அப்படி பெண் பிரதிநிதிகள் விதிகளை மீறி செயல்படுவதை உறுதி செய்யும் பட்சத்தில், உள்ளாட்சி மன்ற கூட்டங்களில், பெண் பிரதிநிதிகளின் கணவர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டதாக உறுதி செய்யப்பட்டால், அந்தக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் உடனடியாக ரத்து செய்ய உத்தரவிட வேண்டுகிறோம். மேலும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ல் பிரிவு 205 இன் படி, நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.

கிராமசபை சட்ட விதிகளின்படி வரும் 01.05. 2022 அன்று மே தினத்தில் திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில், பெண் பிரதிநிதிகளின் கணவர் உள்ளிட்ட உறவினர்கள் தலையீட்டை தடுக்க, அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி பத்திரிக்கை செய்தி வாயிலாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுகிறோம். கூட்ட நடவடிக்கையை புகைப்படம் வீடியோ எடுத்து ஆவணப்படுத்த அறிவுறுத்த வேண்டுகிறோம்.கிராம சபையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என மக்கள் முன் வைக்கும் கோரிக்கைகளை ஊராட்சி தலைவர் நிராகரிக்காமல் அவை தீர்மானமாக நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுகிறோம்.

Updated On: 29 April 2022 6:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது