/* */

திருச்சி வாணப்பட்டரை தெரு மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்

திருச்சி வாணப்பட்டரை தெரு மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரை தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 10-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து 17-ஆம் தேதி முதல் அம்மன் பச்சை பட்டினி நோன்பு தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் அம்மன் கேடயம், கமல வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சிம்ம வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிலையில் 10-ஆம் நாளான இன்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காலை 8 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தேர் வாணபட்டரை தெரு, வடக்கு ஆண்டாள் தெரு, கீழ ஆண்டாள் தெரு, சின்ன கடைவீதி, என்.எஸ்.பி.ரோடு வழியாக இரவு 8.30 மணிக்கு மேல் மீண்டும் கோவில் வந்தடைந்தது. பின்னர் அம்மன் தேரில் இருந்து இறங்கி கோவில் சென்றடைந்தார். இந்த திருவிழாவில் ஏராளமான பகுதிகளிலிருந்து பக்தர்கள் தேங்காய் பழம் கொண்டு வந்து உடைத்து சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், இளைஞர் குழு, நண்பர்கள் குழு உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து இன்று மாலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், நாளை அம்மனுக்கு முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து, அடுத்த நாள் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து, ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. மாலை சந்தன காப்பு அலங்காரம் நடைபெறுகிறது அதைதொடர்ந்து மே 1-ஆம் தேதி பகல் 12 மணிக்கு ஆற்றுக்கு வேல் புறப்படுதல் நிகழ்ச்சியும் மாலை 6 மணிக்கு மேல் சப்பாணி கருப்பு குதிரை வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அன்று நள்ளிரவு 12 மணிக்கு குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து 2-ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் பெரிய பூஜை நிகழ்ச்சியும், 12 மணிக்கு மகா அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Updated On: 26 April 2022 11:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது