/* */

பூப்பந்து போட்டியில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சாம்பியன்

பூப்பந்து போட்டியில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.

HIGHLIGHTS

பூப்பந்து போட்டியில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சாம்பியன்
X

பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர்கள் கல்லூரி நிர்வாகிகளுடன் உள்ளனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான பூப்பந்து போட்டி நாக்-அவுட் மற்றும் அரையிறுதி போட்டிகள் லீக் முறையில் திருச்சி, செயின்ட் ஜோசப்'ஸ் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

5 கல்லூரி அணிகள் பங்கேற்ற பூப்பந்து போட்டியில் கால் இறுதியில் வென்ற திருச்சி, செயின்ட் ஜோசப்'ஸ், ஜமால் முகமது, புதுகை, ஆலங்குடி ஜேசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மயிலாடுதுறை ஏ.வி. சி. ஆகிய நான்கு கல்லூரி அணிகள் அரை இறுதி லீக் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றன.

அரை இறுதி லீக் போட்டிகளில் திருச்சி, செயின்ட் ஜோசப்'ஸ் கல்லூரி, திருச்சி, ஜமால் முகமது கல்லூரியை 35-27, 35-17 என்ற புள்ளிகள் கணக்கிலும், மயிலாடுதுறை, ஏ.வி.சி. கல்லூரியை 35-26, 35-22 என்ற புள்ளிகள் கணக்கிலும்,

புதுகை, ஆலங்குடி ஜேசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 35-6, 35-14 என்ற புள்ளிகள் கணக்கிலும் மூன்று போட்டிகளிலும் வென்று முதலிடம் பிடித்து திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக பூப்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

திருச்சி ஜமால் முகமது கல்லூரி, மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியை 33-35, 35-14, 35-29, புதுகை, ஆலங்குடி ஜேசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 35-14, 35-9 என்ற புள்ளிகள் கணக்கிலும் இரண்டு போட்டிகளில் வென்று இரண்டாவது இடம் பிடித்தது.

மயிலாடுதுறை, ஏ.வி.சி. கல்லூரி, புதுகை, ஆலங்குடி ஜேசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 35-14, 35-9 என்ற புள்ளிகள் கணக்கில் ஒரு போட்டியில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.

பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரி வீரர்களை கல்லூரி செயலாளர் அருட்தந்தை எஸ். பீட்டர், முதல்வர் அருட்தந்தை எம். ஆரோக்கியசாமி சேவியர், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை எம். பெர்க்மென்ஸ், உடற்கல்வி இயக்குனர் ஏ. பிரேம் எட்வின், உதவி உடற்கல்வி இயக்குனர் எஸ். ரெனில்டன் ஆகியோர் பாராட்டினார்கள்.

Updated On: 11 March 2022 4:42 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?