/* */

சிறுசேமிப்பு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு..

Siru Semippu Katturai in Tamil-சிறுசேமிப்பு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார்.

HIGHLIGHTS

Siru Semippu Katturai in Tamil
X

Siru Semippu Katturai in Tamil

Siru Semippu Katturai in Tamil-“சிக்கனம் மற்றும் சேமிப்பு பண்பினை பள்ளி, மாணவ, மாணவியர்களிடையே வளர்த்திடும் வகையில், உலக சிக்கன நாளை முன்னிட்டு, நடைபெற்ற பல்வேறுபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

“உலக சிக்கன நாளாக' ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ஆம் நாள் அனுசரிக்கப்பட்டுவருகிறது. அதனை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளிடையே “சிக்கனம் மற்றும் சேமிக்கும்.பண்பினை” வளர்த்திடும் பொருட்டு மாணவர்களிடையே கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி,பேச்சுப்போட்டி, சிறுசேமிப்பு குறித்த சிறந்த விழிப்புணர்வு, சொற்றொடர்களுக்கான போட்டி மற்றும் சிறுசேமிப்பு குறித்தவினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்கள்மாவட்ட ஆட்சித்தலைவரால் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிஊக்கப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

அதன்படி இந்த 2021- 2022 ஆம் நிதியாண்டிலும் கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி,சிறுசேமிப்பு குறித்த சிறந்த விழிப்புணர்வு சொற்றொடர்களுக்கான போட்டி மற்றும் சிறுசேமிப்பு குறித்த வினாடி வினாபோட்டிகளில் வெற்றிபெற்ற 12 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுசான்றிதழ்களை இன்று 06.03.2023 மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறு சேமிப்பின்அவசியத்தை உணர்த்துவதோடு ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு அஞ்சலக கணக்கு துவங்கவேண்டும் என்ற திட்டத்தினை செயல்படுத்தி 2022-2023-ஆம் ஆண்டில் சிறு சேமிப்பு வசூலைஅதிகப்படுத்திட வேண்டும் என பொதுமக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு)சாந்தி, பள்ளி தலைமையாசிரிகள், ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 2 April 2024 5:54 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!