/* */

தீபாவளியையொட்டி திருச்சி கடை வீதியில் வாகனம் நிறுத்தும் இடங்கள் அறிவிப்பு

தீபாவளியையொட்டி திருச்சி கடை வீதியில் வாகனம் நிறுத்தும் இடங்கள் பற்றிய விவரத்தை ஆணையர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தீபாவளியையொட்டி திருச்சி கடை வீதியில் வாகனம் நிறுத்தும் இடங்கள் அறிவிப்பு
X

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் காh;த்திகேயன் உத்தரவின்படி, 'தீபாவளி" பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகரம், கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஒவ்வொரு வருடமும் பாதுகாப்புக்காக தேவையான காவல் ஆளினர்களை நியமித்தும், கண்காணிப்பு கோபுரங்கள்,சி.சி.டி.வி.கேமராக்கள், டூம் கேமரா மற்றும் பொது விளம்பரங்கள் மூலமாக எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல், குற்றங்கள் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதே போன்று இந்த வருடமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காகவும், பாதுகாப்புக்காகவும், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாவண்ணம் பண்டிகையை நல்ல முறையில் கொண்டாடவேண்டி கீழ்க்கண்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்காலிக காவல் உதவி மையம்

பொதுமக்களின் பாதுகாப்பை கருதி அவர்கள் தங்களது உடைமைகளையும், குழந்தைகளையும் கவனமாக பார்த்து கொள்ளவும், அசம்பாவிதங்கள் அல்லது சந்தேகப்படும் படியான நபர்கள் பற்றிய தகவல்களை தொpவிக்கவும், அது சம்மந்தமாக புகார் கொடுக்கவும், என்.எஸ்.பி. ரோடு தெப்பக்குளம் அருகில் தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் பொது அறிவிப்பு மையம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு காவல் ஆளினர்கள் மூலம் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து எவ்வித குற்றச் சம்பவம் நிகழாவண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கோபுரங்கள்

குற்ற நடத்தை உடையவர்களை கண்காணிக்க 6 கண்காணிப்பு கோபுரங்கள் என்.எஸ்.பி .ரோடு பெரியகடைவீதி சந்திப்பு (மலைவாசல் அருகில்), சிங்காரதோப்பு பூம்புகார் அருகில், பெரியகடைவீதி கரீம் ஸ்டோர் அருகில், மெயின்கார்டுகேட், தெப்பக்குளம் ரகுநாத் ஜங்சன் அருகில் மற்றும் பெரிய கடைவீதி சந்துக்கடை ஆகிய இடங்களில் நிறுவப்பட்டு பைனாகுலர் மூலம் கண்காணிக்க காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரகசிய கண்காணிப்பு கேமராக்கள்

குற்ற நடத்தைகாரர்களை கண்காணிக்க தெப்பக்குளம் என்.எஸ்.பி. ரோடு சந்திப்பில் ஒரு டூம் கேமராவும், சின்னகடைவீதி, சத்திரம் பேருந்து நிலையம், பெரிய கடைவீதி, நந்திகோயில் தெரு, ஆகிய பகுதிகளில் 23 சி.வி.டி.வி. கேமராக்களும், மெயின்கார்டுகேட், சிங்காரத்தோப்பு, சூப்பர் பஜார், மதுரை ரோடு, டபிள்யூ. பி. ரோடு முதல் ஜாபர்ஷா தெரு ஆகிய பகுதிகளில் 24 கேமராக்களும், சத்திரம் பேருந்து நிலையம், அண்ணா சிலை பகுதிகளில் 120 கேமராக்களும், ஆக மொத்தம் 167சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்ற நடத்தைகாரர்களை கண்காணிக்க சத்திரம் பேருந்து நிலையம், என்.எஸ்.பி.ரோடு ரகுநாத் சந்திப்பு ஆகிய 2 இடங்களில் மானிட்டர்கள் அமைக்கப்பட்டு அதை இயக்குவதற்கு தனித்தனியே காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மேற்கண்ட கடைவீதிகளில் உள்ள நிறுவனங்களின் வாயில்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி .கேமராக்களும், சாலையை நோக்கி திருப்பி வைக்கப்பட்டு அசம்பாவிதங்கள் நிகழா வண்ணம் திருச்சி மாநகரில் அமைக்கப்பட்டுள்ள நவீன கட்டுப்பாட்டு அறை மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தற்காலிக வாகன சோதனை மையங்கள்

நந்தி கோவில் சந்திப்பு, சின்னகடை வீதி - பாபு ரோடு சந்திப்பு,பெரிய கடை வீதி - தைலா சில்க்ஸ் கிலேதாh; ரோடு சந்திப்பு, சிங்காரத் தோப்பு பூம்புகார் எதிர்புறம் ஆகிய இடங்களில் வாகன சோதனை மையங்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் குற்றத்தடுப்புக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெடிகுண்டு கண்டறியும் குழு

வெடிகுண்டு கண்டறியும் காவலர்கள் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெடிகுண்டு சோதனை முழு அளவில் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய பேருந்து நிலையம், ரயில்வே ஜங்சன் மற்றும் பிற முக்கிய பகுதிகளிலும் வெடிகுண்டு கண்டறியும் காவல் ஆளிநர்களை கொண்ட குழுக்கள் தனியாக வெடிகுண்டு கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு

கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு பணிக்காக திருச்சி மாநகர வடக்கு காவல் துணை ஆணையர் தலைமையில், 3 காவல் உதவி ஆணையர்கள், 7 காவல் ஆய்வாளர்கள், 60 சார்பு ஆய்வாளர்கள், 262 காவல் ஆளிநர்களும், 100 ஆயுதப்படை காவலர்களும் மற்றும் 100 ஊர்க்காவல் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குற்ற தடுப்பு பாதுகாப்பு

கோட்டை மற்றும் காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றத்தடுப்பு பணிக்காகவும், குற்ற நடத்தையை கண்காணிக்கவும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவும மேற்படி சரகங்களின் காவல் உதவி ஆணையா;கள் தலைமையில், 3 காவல் ஆய்வாளர்கள், 10 சார்பு ஆய்வாளர்கள், 50 காவல் ஆளிநர்களும், 25 ஊர்காவல் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து ஒழுங்கு பாதுகாப்பு

கோட்டை மற்றும் காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ஓழுங்குபடுத்தவும் போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆணையர் தலைமையில், 2 காவல் ஆய்வாளர்கள், 6 சார்பு ஆய்வாளர்கள், 60 காவல் ஆளிநர்களும், 20 ஊர்காவல் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாகன நிறுத்துமிடங்கள்

* இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தெப்பக்குளம் அஞ்சல் அலுவலகம் பின்புறமுள்ள பனானா லீப் அருகிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம், தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளி மைதானம் மற்றும் கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பார்க்கிங் மைதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

*இருசக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்துவதற்கு சிங்காரத்தோப்பு சூப்பர் பஜார் மற்றும் யானைகுளம் மைதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

*நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்துவதற்கு டபிள்யூ.பி.ரோடு கெயிட்டி திரையரங்கம் உட்புறமுள்ள கார்நிறுத்துமிடம் மற்றும் பழைய குட்ஷெட் ரோடு (சோபிஸ் கார்னர்) அருகில் உள்ள ரயில்வே மைதானம் ஆகிய இடங்கள் என மொத்தம் 6 இடங்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் முன்பின் தெரியாதவர்களிடம் தங்களது உடைமைகளை ஒப்படைக்கவேண்டாம் என்றும், சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் அருகில் உள்ள காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டுமென்றும், காவலர் என்று கூறிக்கொண்டு தங்கள் நகைகளை பத்திரமாக பொட்டலத்தில் மடித்து தருகிறேன் என்று கூறுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட பாதுகாப்பு பணிகளுக்காக திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி, திருச்சி மாநகர வடக்கு காவல் துணை ஆணையர் அன்பு நேரடி கண்காணிப்பில் சட்டம் ஒழுங்கு, குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளுக்காக 4 உதவி ஆணையர்கள், 12 காவல் ஆய்வாளர்கள், 76 சார்பு ஆய்வாளர்கள், 372 காவல் ஆளினர்கள்,100 ஆயுதப்படை காவலர்கள் மற்றும் 145 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 710 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 14 Oct 2022 12:13 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...