/* */

ரிட்டயர்டு ஊழியர்கள் - ரீஎன்ட்ரி பழுதடைந்த ஆக்ஸிஜன் இயந்திரத்தை இயக்க முயற்சி.

ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வில்லாமல் வேலை...

HIGHLIGHTS

ரிட்டயர்டு ஊழியர்கள் - ரீஎன்ட்ரி  பழுதடைந்த ஆக்ஸிஜன் இயந்திரத்தை இயக்க முயற்சி.
X

ஓய்வு பெற்ற பெல் ஊழியர்களை கொண்டு திருச்சி பெல் நிறுவனத்தில் பழுதடைந்த ஆக்ஸிஜன் இயந்திரத்தை இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதுஎன திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

திருச்சி திருவெறும்பூரில் அமைந்துள்ள பெல் நிறுவனத்தில் செயல்பட்டு வந்த ஆக்சிஜன் உற்பத்தி யானது 15 ஆண்டுகளுக்கு முன்பாக நிறுத்தப்பட்டது.அங்கு மீண்டும் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.ஆனால் அங்கு செயல்படாமல் இருக்கும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் பழுதடைந்ததால் அதை மீண்டும் உற்பத்தி செய்ய முடியாது ஆகையால் அங்கு புது ஆக்ஸிஜன் உற்பத்திஆலை உருவாக்கலாம் என பெல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று பெல் தொழிற்சாலையின் நிர்வாகிகளை மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா,

பெல் நிறுவனத்தில் புதிதாக ஆக்ஸிஜன் ஆலை தொடங்க இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகலாம் ஆனால் தற்போது ஆக்ஸிஜன் தேவை மிக அதிகமாக உள்ளது.எனவே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.எனவே திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தில் பணியாற்றிய ஓய்வு பெற்ற ஊழியர்கள் மூன்று பேர் என்னை சந்தித்து அங்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும் என தெரிவித்தனர்.

அவர்களையும் அழைத்து வந்து பெல் தொழிற்சாலையின் நிர்வாகிகளை சந்தித்தேன்.முதலில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய சாத்தியமில்லை என தெரிவித்தனர்.பின்னர் இந்த சூழலில் காலம் தாழ்த்த கூடாது எனவே முயற்சி செய்து பார்க்கலாம் என கூறினேன் அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.ஓய்வு பெற்ற ஊழியர்கள் முதலில் செயல்படாமல் பழுதடைந்து இருக்கும் அந்த இயந்திரத்தை பார்வையிடுவார்கள்

அதன் பின்பு பெல் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் ஒத்துழைப்போடு அதை மீண்டும் இயக்க முயற்சிப்பார்கள்.அந்த முயற்சி கை கொடுத்தால் 20 நாட்களில் மிக குறைந்த செலவில் ஒரு நாளைக்கு 350 சிலிண்டர் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும்.அவர்கள் மூன்று பேரும் ஏற்கனவே அந்த பிரிவில் வேலை செய்துள்ளதால் அவர்களுக்கு அதில் நல்ல அனுபவம் உள்ளது.எனவே அந்த முயற்சி வெற்றி பெறும்.ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய மத்திய அரசிடமிருந்து ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அதை நான் மத்திய அரசிடம் பேசி பெற்று தருவேன்.

பெல் நிறுவனத்தில் பழுதடைந்து இருக்கும் ஆக்சிஜனை உற்பத்தி செய்தால் இந்த சூழலில் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.


Updated On: 18 May 2021 11:39 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  2. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  3. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  4. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  5. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  6. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  7. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  8. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  9. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்