மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் -மருத்துவர் நல சங்கம் கோரிக்கை

மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என . ஸ்ரீரங்கம் மருத்துவர் நல சங்க விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் -மருத்துவர் நல சங்கம் கோரிக்கை
X

ஸ்ரீரங்கத்தில் மருத்துவர் சமூக நல சங்கத்தினர் மருத்துவர் தினம் கொண்டாடினர்.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி உலக முடி திருத்துவோர் தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி ஸ்ரீரங்கம் மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் இன்று ஸ்ரீரங்கத்தில் உலக முடிதிருத்துவோர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி கொடி ஏற்றினார்.

கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களையும், ஊராட்சி கிராமப்புற தொழிலாளர்களையும் அரசு ஊழியராக பணி நியமனம் செய்ய வேண்டும். தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு இலவச வீடுகள் ஒதுக்க வேண்டும். மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். எம்.பி.சி. உள் ஒதுக்கீட்டை இரண்டரை சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். பி.சி.ஆர். சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் செயலாளர் ராஜலிங்கம், ஆலோசகர் சுரேஷ்,இளைஞர் அணி அமைப்பாளர்கள் மாரிமுத்து, ஜீவரத்தினம், பிரபாகரன், ரகுராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.

Updated On: 16 Sep 2021 7:45 AM GMT

Related News

Latest News

 1. தியாகராய நகர்
  தமிழகத்திற்கு 500 மின்சார பேருந்து : அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்
 2. அந்தியூர்
  அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை தடுப்பணை உடைந்து விவசாய பயிர்கள் சேதம்
 3. பாளையங்கோட்டை
  நெல்லையில் பாரம்பரிய சரிவிகித உணவு திருவிழா கண்காட்சி
 4. கூடலூர்
  நீலகிரி முதுமலையில் வெளுத்து வாங்கிய கனமழை
 5. சென்னை
  சென்னையில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ்...
 6. சென்னை
  சென்னை மாவட்டத்தில் 23ம் தேதி 141 பேருக்கு கொரோனா
 7. குளித்தலை
  மருதூர் பேரூராட்சியில் சாலை வசதி கோரும் பொதுமக்கள்
 8. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு மாவட்டத்தில் 23ம் தேதி 97 பேருக்கு கொரோனா
 9. அந்தியூர்
  ஒன்றிய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
 10. விளையாட்டு
  டி20 உலககோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில்...