/* */

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் 5-ம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி 5-ம் நாள் விழாவான இன்று நம்பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளினார்.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில்  5-ம் நாள் நிகழ்ச்சி
X

பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோகம் வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலின் வைகுந்த ஏகாதசி விழா கடந்த சனிக்கிழமை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா பகல் பத்து, ராப்பத்து என்று நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 5- ம் நாளான இன்று (08.12.2021) ஸ்ரீ நம்பெருமாள் இரத்தின பாண்டியன் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைரகைக் காப்பு, விமான பதக்கம், நெல்லிக்காய் மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளினார்.

தனுர் லக்னத்தில் புறப்பட்ட நம்பெருமாள் அர்ஜூன மண்டபத்திற்கு சென்றடைந்தார். அங்கு நம்பெருமாளுக்கு அரையர் சேவையுடன் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 8 Dec 2021 4:29 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...