/* */

மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ்மோதியதில் ஒருவர் தலைநசுங்கி பலி

திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ்மோதியதில் ஒருவர் தலைநசுங்கி பலியானார்.

HIGHLIGHTS

மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ்மோதியதில் ஒருவர் தலைநசுங்கி பலி
X

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நெற்குப்பை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் வெற்றிவேல் (வயது 28). கட்டிட தொழிலாளியான இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த மலர்மன்னன் மகன் கரண் (வயது 18), மூக்கன் மகன் முரளி (வயது 17) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை கரண் ஓட்டி வந்துள்ளார். பின்னால் வெற்றிவேல், முரளி ஆகிய இரண்டு பேரும் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் டோல்கேட் அருகே பழூர் என்ற இடத்தில் வந்தபோது பெட்ரோல் பங்கிற்கு செல்வதற்காக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது எதிரே சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 3 பேரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர்.

இதில் வெற்றிவேல் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் விபத்தில் பலியான வெற்றிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பேருந்தின் ஓட்டுநர் கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள நெய்தலூர் சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துகுமார் (வயது 37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 March 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  3. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  4. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  6. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  8. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  9. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  10. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!