/* */

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய கனிமொழி

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கனிமொழி எம்பி பரிசு வழங்கினார்.

HIGHLIGHTS

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய கனிமொழி
X

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கனிமொழி எம்பி பரிசு வழங்கினார்.

திமுக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்செந்தூரில் மாபெரும் மாரத்தான் போட்டி. தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆண், பெண் இரு பாலரும் பங்கேற்ற மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி காலை 06:30 மணிக்கு கொடியசைத்து துவக்கி வைத்தார். அதே இடத்தில் 08:30 மணி அளவில் நிறைவு பெற்றது.

இதில் ஆண்களுக்கான போட்டி 21 கி.மீ தூரம் ஆகும். வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ. 25 ஆயிரம், மேலும் 5 முதல் 10 இடங்களில் வரும் 6 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. பெண்களுக்கான போட்டி 15 கி.மீ தூரம் ஆகும். வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ.25 ஆயிரம், மேலும் 5 முதல் 10 இடங்களில் வரும் 6 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்குக் கனிமொழி எம்.பி ரொக்க பரிசு வழங்கி வாழ்த்தினர். ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற, புதுக்கோட்டையைச் சார்ந்த லக்ஷ்மணன் முதல் பரிசாக ரூ. 1 லட்சம், கோவையை சார்ந்த சதிஷ் குமார் இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரம், தென்காசியை பசுபதி மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரம், நீலகிரி சார்ந்த நிகில் குமார் நான்காம் பரிசாக ரூ. 25 ஆயிரம் மேலும் 5 முதல் 10 இடங்களில் வரும் 6 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கினார். பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற, புதுக்கோட்டையை சார்ந்த L.சூர்யா முதல் பரிசாக ரூ. 1 லட்சம், சேலம் மாவட்டத்தை சார்ந்த ட.லதா இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரம், விருதுநகரை சார்ந்த கௌஷிகா மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரம், கோவையை சார்ந்த ஷானியா நான்காம் பரிசாக ரூ. 25 ஆயிரம் மேலும் 5 முதல் 10 இடங்களில் வரும் 6 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

இதில் சுவாரசியம் என்ன வென்றால், இரு பிரிவிலும் முதல் இடம் பெற்றவர்கள் புதுக்கோட்டையை சேர்ந்த கணவன் - மனைவி என்பதாகும். மேலும் பெண்களுக்கான போட்டியில், வெறும் காலில் ஓடியவர்களுக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி தனது சொந்த செலவில் ஷூ வாங்கி கொடுத்தார்.

நிகழ்வில் பேசிய கனிமொழி எம்.பி: முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெறக்கூடிய இந்த மாபெரும் மாரத்தான் போட்டி.இந்த மாரத்தான் என்பது, இங்கே இருக்கக்கூடிய மாணவ மாணவியருடன் ஸ்டாமினாவை எந்த அளவுக்கு ஒன்றை செய்து வெற்றி மட்டும் இல்லை. அதையும் தாண்டி ஒரு வேலையை எடுத்தால் அதை செஞ்சி முடிக்கணும். அது தலைவர் கலைஞராக இருந்தாலும், தளபதியாக இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு வேளையை எடுத்தால் அதை செய்து முடிப்பார்கள். அதுதான் இந்த மாரத்தான் போட்டியில் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று, அதனால் தன்னம்பிக்கையோடு தொடர்ந்து நமக்கு என்ன விஷயம் பிடிக்குமோ அதை விட்டுவிடாமல் யாரெல்லாம் முடிவு முடியல அப்படி சொல்கிறார்களோ அதை ஏற்றுக்கொள்ளாமல், அதைச் செய்து சாதித்துக் காட்ட வேண்டியது உங்களுடைய கடமை என்ற அந்த உணர்வோடு உங்களுக்கு பிடித்த விஷயங்களை தொடர்ந்து செய்யுங்கள்.

அது ஆண், பெண் என்று எந்த வித்தியாசத்தையும் இடம் கொடுக்காதது விளையாட்டு என்கின்ற ஒரு விஷயம். அவர்களால் என்ன சாதிக்க முடியுமோ அதைப் பெண்களாலும் சாதிக்க முடியும். பெண்களால் எதை சாதிக்க முடியுமோ அதை ஆண்களும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும். உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.

Updated On: 3 March 2024 6:11 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!