/* */

திருச்செந்தூர்: அய்யா வைகுண்டர் அவதார தினத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொண்டடினர்

திருச்செந்தூர் அவதாரபதியில் கடலில் பதமிடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

HIGHLIGHTS

திருச்செந்தூர்: அய்யா வைகுண்டர் அவதார தினத்தை  பல்லாயிரக்கணக்கான  மக்கள் கொண்டடினர்
X

அய்யா வைகுண்டர் அவதாரபதியில் அவதார தின விழாவை முன்னிட்டு, கடலில் பதனிடும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அய்யா வைகுண்டரின் 190வது அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அவதாரபதியில் கடலில் பதமிடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில், அய்யா வைகுண்டரின் அவதார தின விழா ஒவ்வொரு ஆண்டும் மாசி 20ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 190-வது அவதார தினவிழாவை முன்னிட்டு அதிகாலை 3மணி முதல் அய்யாவுக்கு தாலாட்டு பாடுதல், அபயம் பாடுதல், பள்ளி உணர்த்தல் உள்ளிட்ட பணிவிடைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலையில் சூரிய உதயத்தின் போது பனிவிடை பொருட்களுடன் கடல் பதமிடுதல் நிகழ்வு நடைபெற்றது. இதில் நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கடற்கரையில் அய்யா சிவ சிவ சிவ சிவ.. ஹர ஹர ஹர ஹர என்ற கோசத்துடன் சூரிய உதயத்தை பார்த்து அய்யா அவரித்ததாக கருதி மலர்கள் தூவி வரவேற்று வழிபட்டனர். இதனை தொடர்ந்து கோவில் நடைதிறக்கப்பட்டு அவதார விழா பணிவிடை, உகம்பெருக்குதல், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அய்யா அவதார தினவிழா முன்னிட்டு தூத்துக்குடி,நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர் செயலாளர் பொன்னுத்துரை பொருளாளர் ராமையா துணைத் தலைவர் ஐயா பழம் துணை செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்சிங் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Updated On: 4 March 2022 6:15 PM GMT

Related News