/* */

தூத்துக்குடி மருத்துவமனை - ஆக்ஸிஜன்படுக்கை,செவிலியர் பற்றாக்குறை ஏற்படாத நிலையை உருவாக்க பணியாற்றுவேன்-மருத்துவமனை புதிய டீன்

தூத்துக்குடி அரசு மருத்துவமனை புதிய முதல்வராக டி.நேரு பொறுப்பேற்றுக்கொண்டார்.தொடர்ந்து மருத்துவமனை ஆய்வுகளை மேற்கொண்டார்

HIGHLIGHTS

தூத்துக்குடி மருத்துவமனை - ஆக்ஸிஜன்படுக்கை,செவிலியர் பற்றாக்குறை ஏற்படாத நிலையை உருவாக்க பணியாற்றுவேன்-மருத்துவமனை புதிய டீன்
X

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வர் டி.நேரு. 

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வராக டி.நேரு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், இதைத்தொடர்ந்து மருத்துவமனை வளர்ச்சிக்கான ஆய்வுகளை மேற்கொண்டார்.

பின்னர் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அனைவருக்கும் சிறந்த சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படும்

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் மூலம் ஆக்ஸிஜன் வழங்குவதற்கு தொண்டு நிறுவனங்கள் மருத்துவ உபகரணங்கள் வழங்க வழங்கிவருகிறது. தொடர்ந்து, இதுபோன்ற உதவிகளை செய்ய முன்வரவேண்டும். தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன்‌ படுக்கை பற்றாக்குறை மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை இல்லாத நிலையை உருவாக்க பணியாற்றுவேன்.

இரண்டாம் அலை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2-வது நாளே நுரையீரல் பாதிக்கப்படுவதால் சிகிச்சை பலனின்றி நோயாளிகள் இறக்க நேரிடுகிறது. தற்போது, சராசரியாக நாளொன்றுக்கு 2 பேர் கொரோனாவால் இறக்கின்றனர். இறப்புகளே இல்லாத நிலையை உருவாக்குவது 100 சதவீதம் சாத்தியமற்றது. எனினும் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அனைத்தும் முயற்சிகளும் எடுக்கப்படும் என்றார். பேட்டியின் போது அரசு மருத்துவர்கள் பாவலன், குமரன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி உட்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 26 May 2021 8:29 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...