/* */

விரால் மீன் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்ப பயிற்சியில் பங்கேற்க அழைப்பு

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பிப்ரவரி 17 ஆம் தேதி விரால் மீன் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்பம் குறித்த பயிற்சி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

விரால் மீன் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்ப பயிற்சியில் பங்கேற்க அழைப்பு
X

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம். (கோப்பு படம்).

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அலங்கார மீன் வளர்ப்பு, மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 17 ஆம் தேதி விரால் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்பம் குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் அகிலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், மீன் வளர்ப்புத் துறை சார்பில், "விரால் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்பம்'' பற்றிய ஒரு நாள் வளாக வழியிலான பயிற்சி 17.02.2023 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கபட உள்ளது.

இந்தப் பயிற்சியில் விரால் மீனின் உயிரியல், சினைமீன் தேர்வு செய்தல், ஹார்மோன் செலுத்தும் முறைகள், இனப்பெருக்கம், குஞ்சு சேகரித்தல், குஞ்சுகளை வளர்க்கும் தொழில்நுட்பம், உணவு மற்றும் உணவிடுதல் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப வகுப்பு பயிற்சி அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அனைவரும் ரூ. 300 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியாளர்கள் நேரடியாகவோ அல்லது கல்லூரி வங்கி கணக்கு வாயிலாகவோ பணத்தை செலுத்தலாம். பயிற்சியின் முடிவில் பயிற்சியாளர்களின் சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்படும்.

இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் அனைவரும் 16.02.2023 அன்று மாலை 5 மணிக்குள் 8072208079 மற்றும் 9600205124 என்ற செல்போன் எண்களிலும், உதவிப் பேராசிரியர், மீன்வளர்ப்புத் துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி-628008 என்ற முகவரியில் நேரிலும் தொடர்பு கொண்டு கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும், anix@tnfu.ac.in மற்றும் betsy@tnfu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் அகிலன் தெரிவித்துள்ளார்.

Updated On: 8 Feb 2023 5:06 PM GMT

Related News