/* */

தாட்கோ மூலம் ஆவின் பாலகம் அமைக்க சலுகைகள்... தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அழைப்பு..

தாட்கோ மூலம் வழங்கப்படும் சலுகைகளை தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

தாட்கோ மூலம் ஆவின் பாலகம் அமைக்க சலுகைகள்... தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அழைப்பு..
X

மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு தாட்கோ மூலம் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மானியத்துடன் கூடிய வாகனக் கடன், தொழில் தொடங்க கடன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாட்கோ மூலம் தற்போது வழங்கப்பட உள்ள சலுகைகள் குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

தாட்கோ மூலம் தற்போது ஆவின் பாலகம் அமைக்க மானியம் வழங்கப்படுகிரது. இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதுவும் பெற்றிருக்கக் கூடாது. கூடுதல் செலவினத்தை ஈடு செய்யவும் மற்றும் அதிகபட்ச மானியத்தொகை சென்றடைய, ஆதிதிராவிட தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமான ரூ. 2.25 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் விடுவிக்கப்படும்.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் ஆவின் பாலகம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் கடையின் இடம் குறைந்தபட்சம் 100 சதுர அடியாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சொந்தமாகவோ, குத்தகைக்கோ அல்லது வாடகைக்கட்டிடத்திலோ இருக்க வேண்டும். அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் அருகில் உள்ள மண்டல அலுவலகத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்தவுடன் அந்தந்த மண்டல அலுவலகத்தின் பொது மேலாளர் மற்றும் துணை பொது மேலாளர் கடையை மதிப்பீடு செய்து, ஒதுக்கீட்டு உத்தரவை வழங்குவார்கள்.

விண்ணபதாரர் மற்றும் ஆவின் நிறுவனம் இடையே போடப்படும் ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு ஓப்பந்தம் போட வேண்டும். அவ்வாறு போடப்படும் ஒப்பந்தம் ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் புதுப்பிக்கப்படும். வணிகத்தை தொடங்குவதற்கு முன், விண்ணப்பதாரர் உணவு பாதுகாப்புத் துறையில் இருந்து உணவு உரிமத்தைப்பெற வேண்டும்.

குளிர்விப்பான் மற்றும் உறைவிப்பான் குறைந்தபட்ச கொள்ளளவு 200 லிட்டர் ஆகும். ஆவின் பொருட்கள் ஆவின் மூலம் விற்பனை நிலையத்திற்கோ நேரடியாக சென்று விநியோகம் செய்யப்படும். அவற்றிற்கான பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும். சில்லறை விற்பனை விலை ஒவ்வொரு தயாரிப்புக்கும் 6 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை மாறுபடும்.

ஆவின் பால் பொருட்களை நிர்ணயித்த விலையில் மட்டுமே விற்க வேண்டும். அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தால் ஆவின் நிறுவனம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் எந்த அறிவிப்புமின்றி சில்லறை விற்பனையை நிறுத்துவகதற்கும் வழிவகுக்கும். விண்ணப்பதாரர் ஆவின் நிறுவனத்தால் அவ்வப்போது செயல்படுத்தப்படும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஆவின் நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி விற்பனை செய்ய வேண்டும். குறைந்தபட்சமாக ஒரு மாதத்திற்கு விற்பனை செய்ய வேண்டிய இலக்கு ரூ. 5000 ஆகும்.

தீவனப்புல் மற்றும் புல்கரணைகள் வளர்க்க மானியம்:

இதேபோல, தாட்கோ மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் தீவனப் புல் மற்றும் புல்கரணைகள் வளர்க்கவும் மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் திடட்த்தில் பயன்பெற விரும்புவோர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவராகவும், 18 வயது முதல் 65 வயதிற்குள்ளானவராகவும் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தீவனப்புல் மற்றும் புல்கரணைகள் வளர்க்க ஆர்வமுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விதிமுறைகளின்படி விண்ணப்பதாரர்களை சம்மந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் பரிந்துரைப்பார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும் அல்லது உறுப்பினராகச் சேர வேண்டும். பயனாளிகளுக்கு விதைத்தொகுப்பு புல்கரணைகளுடன் அந்தத் தீவனங்களை வளர்க்க தேவையான பயிற்சி கையேடுகள் மற்றும் களப்பயிற்சி ஆகியவற்றிற்கான செலவினங்கள் ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10000 என்ற மானியத் தொகைக்குட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

தாட்கோ மாவட்ட மேலாளர் ஒவ்வொரு மாதமும் இந்தத் திட்டத்தின் முன்னேற்றத்தை கண்டறிவதற்கு வழக்கமான கூட்டங்களை மாவட்ட அளவில் நடத்தி ஒவ்வொரு பயனாளியின் புகைப்பட ஆவணங்களை கட்டாயம் பரமரிக்க வேண்டும். தீவன விதைகள் ஆவின் நிறுவனம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 12 Nov 2022 11:11 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்