/* */

விரட்டி.. விரட்டி.. கடித்த வெறிநாய்! தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 11 பேர் அனுமதி

வெறிநாய் கடித்ததில் காயமடைந்த 11 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

HIGHLIGHTS

விரட்டி.. விரட்டி.. கடித்த வெறிநாய்! தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 11 பேர் அனுமதி
X

வெறிநாய் கடித்ததில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்.

தூத்துக்குடி மாவட்டம், கீழ வைப்பார் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பலர் வீட்டில் இருந்து உள்ளனர். சிலர் தேவாலயத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளனர். அப்போது, அந்தப் பகுதியில் நுழைந்த வெறி நாய் ஒன்று திடீரென தெருக்களில் நடந்துச் சென்றவர்கள், ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்கள் என ஒருவரையும் விடாமல் துரத்தி துரத்தி கடித்துள்ளது.

நாய் துரத்துவதை அறிந்த பெண்கள் பலர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இருப்பினும், அவர்களையும் விடாமல் அந்த நாய் கடித்து உள்ளது. அந்தப் பகுதியில் இருந்த இளைஞர்கள் வெறிநாயை விரட்ட முயன்றபோது அவர்களையும் நாய் துரத்தி உள்ளது.

மேலும், வெறி நாய் கடித்ததில் பெண்கள் பலருக்கு கழுத்து, இடுப்பு, கால், கை, உள்ளிட்ட இடங்களில் பயங்கரமான காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 வயது சிறுமி ஜெரிஸ்மா, மேலும், ஜெஸ்மிதா, திபான்சியா, சூசை அம்மாள், பிருந்தா, சிலுவையம்மாள் உள்ளிட்ட 11 பேர் படுகாயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

கிராமத்தில் சிறுமி பெண்களை விரட்டி கடிக்கும் வெறி நாயை பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக தேடி பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழ வைப்பார் கிராமத்தில் வெறிநாய் கடித்து 11 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த கிராமத்தில் பொதுமக்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கீழ வைப்பார் கிராமம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் வெறிநாய்களை கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 26 March 2023 1:52 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!