/* */

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி குறித்து கனிமொழி எம்பி தலைமையில் கூட்டம்

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி குறித்து எதிர்ப்பாளர்கள், அதிகாரிகளுக்கு இடையேயான விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி குறித்து கனிமொழி எம்பி தலைமையில்  கூட்டம்
X

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி குறித்த விளக்கக் கூட்டம் கனிமொழி எம்பி தலைமையில் நடந்த காட்சி.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மேற்கொள்ள தமிழக அரசு செய்துள்ள பணிகள் மற்றும் தாமிர உருக்கு பகுதியில் பணிகள் நடைபெறாமல் இருப்பதை தடுப்பதற்காக கண்காணிப்பு குழுவினர் எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் தரப்புக்கு இடையேயான விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமாபாபு, வழக்கறிஞர் அதிசய குமார் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மகேஷ், மெரினா பிரபு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் தரப்பில் கனிமொழி எம்பி, மாவட்ட ஆட்சியரும் ஆக்சிஜன் உற்பத்தி கண்காணிப்பு குழு தலைவருமான செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி கண்ணபிரான் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க போராளிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு சார்பில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி தலைமையில் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி மேற்கொள்வதற்கான பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக எதிர்ப்பு இயக்கங்கள் சார்பில் ஸ்டெர்லைட் ஆலை முழுவதுமாக தூத்துக்குடியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை மீது எங்களுக்கு இருக்கக்கூடிய அச்சங்கள் குறித்து தெளிவு படுத்தப் பட்டன. ஆக்சிஜன் தேவையை காரணம் காட்டி ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி பணிக்காக திறக்கப்பட்டது போல வருங்காலத்தில் தாமிரம் தேவையை காரணம் காட்டி தாமிரம் உற்பத்தி பணியை தொடங்க வாய்ப்பு இருக்கிறது என்ற அச்சத்தை தெளிவுபடுத்தினோம்.

எங்களது கருத்துக்களை கேட்ட அதிகாரிகள் அதற்கு உரிய விளக்கம் அளித்தனர். தமிழக அரசு எந்த சூழலிலும் தாமிர உற்பத்தியை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் அனுமதிக்காது என உறுதி அளித்துள்ளனர். உயிர் சூழலுக்காக துப்பாக்கி சூட்டில் 15 பேரை தியாகிகளாக கருதி இறந்தவர்களுக்கு தூத்துக்குடியில் மணிமண்டபம் அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உள்ளோம். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட கொலையாளிகள் மீது உடனடியாக குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளோம்.

இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடிய போராளிகள் மீது பல்லாயிரக்கணக்கான வழக்குகள் போடப்பட்டுள்ளன, அந்த வழக்குகள் அனைத்தும் தற்போதைய தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் உறுதியளித்தபடி வாபஸ் பெற வேண்டும் என்பதை முன்வைத்தோம்.. எக்காரணத்தை கொண்டும் தூத்துக்குடியில் தாமிர உற்பத்திக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்ற அச்சத்தையும் நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். நிச்சயமாக எங்களது கோரிக்கைகளை முழுமனதோடு ஏற்று அதனை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர் என்றார்.

Updated On: 12 May 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...