/* */

துப்பாக்கி சின்னத்துடன் காக்கி பைக்...

காப்பவன் கடவுள் என்றால் நானும் கடவுள் தான்

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பார்வைக்கு...

தூத்துக்குடி நகர உட்கோட்டம் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல் நிலைய எழுத்தாளர் அலெக்ஸ் என்பவருக்கு சொந்தமான (புதிதான புல்லட் வாகனம்) விலையுயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவ்விருசக்கர வாகனமானது தெர்மல் நகர் காவல் நிலைய எழுத்தாளர் அலெக்ஸ் என்பவருக்கு சொந்தமானது என விசாரித்ததில் தெரியவருகிறது.

மேற்படி இரு சக்கர வாகனத்தில் பதிவு எண் எதுவும் எழுதப்படவில்ல. அதற்கு பதிலாக நெம்பர் பிளேட்டில் துப்பாக்கி சின்னத்துடன் காக்கி என எழுதப்பட்டுள்ளது பின்புற நம்பர் பிளேட்டில் காப்பவன் கடவுள் என்றால் நானும் கடவுள் தான் எனவும் எழுதப்பட்டுள்ளது.

மேலும் சிங்கத்தின் உருவங்களை பொறித்த அடையாள சின்னங்களை பொருத்தி ஜாதி வன்மங்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு வாகன சட்ட அத்துமீறல்கள் அரங்கேற்றி உள்ளார். காவல் துறையினரின் இத்தகைய இருசக்கர வாகன அடையாளங்கள், பதிவுகள் அனைத்தும் பொதுமக்களை முகம் சுழிக்கும் விதமாகவும், கலவரங்களை தூண்டும் விதமாக உள்ளதாக குறிப்பிடுகின்றனர் .

பல்வேறு வாகன சட்ட விதிகளை காரணம் காட்டி பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு பல்வேறு அபராதம், பறிமுதல் நடவடிக்கை எடுக்கும் போக்குவரத்து காவல் துறையினர் இத்தகைய தெர்மல் நகர் காவல் நிலைய அலுவலர் அலெக்ஸின் இருசக்கர வாகன செயல்கள்/ விதிமீறல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜாதி வன்மங்களை வெளிப்படுத்தும் வகையிலும், காவல் துறையினருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும், போக்குவரத்து சட்ட விதிகளுக்கு எதிராக செயல்படும் தெர்மல் நகர் காவல் நிலைய எழுத்தாளர் அலெக்ஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதோடு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்திட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அக்ரி பரமசிவன்..


#இன்று #பொதுமக்கள்தகவல் #போலீஸ் #கண்காணிப்பு #Bike ##இன்ஸ்டாநியூஸ் #Instanews # அக்ரி பரமசிவன் #tamilnadu #covid19 #police # #people #gun

Updated On: 10 May 2021 11:22 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்