/* */

பாதுகாக்கப்பட்ட வான் தீவு பகுதிகளில் கனிமொழி எம்.பி ஆய்வு

DMK Tamil News -தூத்துக்குடி அருகே உள்ள பாதுகாக்கப்பட்ட வான் தீவு பகுதியில், தூத்துக்குடி எம்.பி கனிமொழி படகில்‌ சென்று ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

DMK Tamil News | DMK Kanimozhi
X

வான்தீவு கடலோர பகுதியில், எம்.பி கனிமொழி ஆய்வு.

DMK Tamil News -மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இந்த தீவுகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி அருகே உள்ள வான் தீவு கடல் பகுதியில், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக வானத்தீவின் நிலப்பரப்பு மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது.

இந்நிலையில் வான் தீவின் நிலப்பரப்பை அதிகப்படுத்தும் வகையில், அலைத்தடுப்புச் சுவர்கள், 12 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளையும், வனத்துறை மூலம் வான் தீவு பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு பணிகளையும் கனிமொழி எம்.பி, படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வான் தீவு பகுதியில் கட்டப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் பனை மரச்செடிகளையும் பாதுகாக்கப்பட்ட பவளப்பாறைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கனிமொழி எம்.பி இதுகுறித்து, அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் டோமர் (நபார்டு), துணைப் பொதுமேலாளர் சுரேஷ் ராமலிங்கம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 24 Sep 2022 10:17 AM GMT

Related News