/* */

இளஞ்சிறார்களை கையாளுவது எப்படி? காவல்துறையினருக்கு நீதிபதி அறிவுரை

இளஞ்சிறார்களை கையாளுவது எப்படி என்பது குறித்து இளைஞர் நீதி குழும முதன்மை நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

இளஞ்சிறார்களை கையாளுவது எப்படி?  காவல்துறையினருக்கு நீதிபதி அறிவுரை
X

தூத்துக்குடியில் நடைபெற்ற காவல் துறை அதிகாரிகள் கூட்டத்தில் நீதிபதி குபேந்திர சுந்தர் பேசினார்.

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி கடந்த 2019 ஆம் ஆண்டு குழந்தைகள் காணாமல் போன வழக்குகள் மற்றும் போக்சோ வழக்குகளில் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு உதவியாகவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீட்டு தொகை பெற்று தருவதற்கும், குற்ற செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாள்வதற்காகவும் குழந்தைகள் நல காவல் அலுவலர் என்ற குழு ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வளார்கள் குழந்தைகள் நல காவல் அலுவலர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று (25.04.2023) தூத்துக்குடி இளைஞர் நீதி குழுமத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி இளைஞர் நீதி குழுமம் முதன்மை நடுவர் குபேந்திர சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சிறப்பு சிறார் காவல் அலகின் பொறுப்பு அதிகாரியும் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளருமான ஜெயராம் முன்னிலை வகித்தார்.


தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற கூட்டத்தின்போது, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்தும், இளஞ்சிறார்களை கையாள்வது குறித்தும் காவல்துறையினருக்கு இளைஞர் நீதி குழுமத்தின் முதன்மை நடுவர் குபேந்திர சுந்தர் ஆலோசனைகள் வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி உட்பட காவல்துறையினர் மற்றும் தூத்துக்குடி இளைஞர் நல நீதி குழுத்தின் உறுப்பினர்கள் ஜான் சுரேஷ், உமா தேவி மற்றும் நன்னடத்தை அதிகாரி முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Updated On: 25 April 2023 2:28 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!