/* */

ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் முயற்சி: சமூக சேவகருக்கு பசுமை சாம்பியன் விருது

ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சமூக சேவை நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசின் பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் முயற்சி: சமூக சேவகருக்கு பசுமை சாம்பியன் விருது
X

தமிழ்நாடு கிரீன் சாம்பியன் விருதினை இயக்குநர் கென்னடியம் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தமிழ்நாடு கிரீன் சாம்பியன் விருது பெறுவதற்கு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றுத் துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்மாதிரியான பங்களிப்பு வழங்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 2022 - 2023ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதினை சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொடர்பான பணி செய்யும் நிறுவனங்களுக்கு வழங்குகிறது.

இந்த விருதுதினை பெற தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள்,பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள்,தொழிற்சாலைகள் விண்ணப்பித்தனர். இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க கடந்த 5 ஆண்டுகளாக பனைமர விதைகளை விதைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மதர் சமூக சேவை நிறுவனத்தின் இயக்குநர் கென்னடியின் சேவைகளை அங்கீகரித்து, ஊக்கப்படுத்து விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான ஒரு மாவட்ட அளவிலான விருது குழுவினரால் மதர் சமூக சேவை நிறுவனம் தமிழ்நாடு கிரீன் சாம்பியன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.

இதற்கான விருது வழங்கும் விழா ரோச் பூங்கா அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ், உதவி ஆட்சியர் கௌரவ் குமார் முன்னிலை வகித்தனர்.

விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மதர் சமூக சேவை நிறுவனத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் தமிழ்நாடு கிரீன் சாம்பியன் விருதினையும், ஒரு லட்சத்திற்கான காசோலையையும், சான்றிதழை இயக்குநர் கென்னடியிடம் வழங்கி பாராட்டினார்.

விழாவில் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் ஜோமஸ் ஜோசன், ரங்கசாமி உதவி பொறியாளர்கள் முரளி கண்ணன், பிரவீன் பாண்டியன் விளாத்திகுளம் ரேஞ்சர் கவின், திருச்செந்தூர் ரேஞ்சர் கனிமொழி உள்பட பல கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது பெற்ற கென்னடி கூறுகையில், இந்த விருது கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதோடு, எங்கள் சேவையை ஊக்கப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. மேலும், ஒரு கோடி பனை மர விதை நடும் பணியில் உற்சாகத்தை ஏற்படுத்துவதோடு, தற்போது கிடைத்துள்ள ஒரு லட்சம் பரிசுத் தொகையை பனை விதை நடுவதற்கு தொடர்ந்து பயன்படுத்துவோம் என தெரிவித்தார்.

Updated On: 5 Jun 2023 12:51 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு