/* */

தூத்துக்குடி கடற்கரையில் திடக்கழிவுகளை அகற்றிய ஜெயன்ட் குழுமம்

தூத்துக்குடி கடற்கரையில் திடக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஜெயன்ட் குழுமத்தினர் தொடர்ந்து, மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடி கடற்கரையில் திடக்கழிவுகளை அகற்றிய  ஜெயன்ட் குழுமம்
X

தூத்துக்குடி தருவைக்குளம் மாநகராட்சி திடக்கழிவு சேமிப்பு பகுதியில் மரம் நடும் பணியில் ஈடுபட்ட ஜெயன்ட் குழுமத்தினர்.

ஜெயன்ட் சமூக நல நிறுவனத்தின் நிறுவனர் நானா சுதாசாமாவின் பிறந்த நாளின் நினைவாக தூத்துக்குடி ஜெயன்ட் குழுமத்தினர் பல்வேறு சமூக சேவைகள் மற்றும் சமுதாய நலப்பணிகளை மேற்கொண்டனர்.

முதல் நாளில் ‘உய் கேன் டிரஸ்ட” அமைப்பின் தலைவர் ஏஞ்சலின் மூலம் தூத்துக்குடி தருவைகுளத்தில் அமைந்துள்ள மாநகராட்சி திடக்கழிவு சேமிப்பு பகுதியில் மரம் நடும் விழா நடைபெற்றது. மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலர் மற்றும் அவரது பணியாளர்கள் வேண்டிய உதவிகளை செய்தனர். பணியாளர் அனைவருக்கும் சரவனாஸ் செந்தில் ஆறுமுகம் காலை உணவு வழங்கினார்.

அடுத்த நாள் ஜெயன்ட் முன்னாள் மண்டல தலைவர் ஜெயால் ஆலிவர் ராஜேஷ் திலக் மருத்துவமனையில் ரத்ததான முகாமை நடத்தினார். தொடர்ந்து, முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கண் பரிசோதனை முகாமை வாசன் கண் மருத்து மனையின் மூலம் மாவட்ட முப்படை வீரர் வாரியம் முன்னாள் உப தலைர் கர்னல் சுந்தரமும், ஜெயன்ட் சகேலி அமுதா ஸ்ரீநினிவாசமும் இணைந்து நடத்தினர்.

பின்னர், தூத்துக்குடி ஜெயன்ட் குழுமத்தின் தலைவர் ராஜதுரை காமராஜ் கல்லூரி மற்றும் புனித மரியன்னை கல்லூரி தேசிய சமூக நல மாணவ மாணவிகளுடன் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின்படி கடற்கரை திடக்கழிவுகளை அகற்றினர். மறுநாள் வ.உ.சி சிறப்பு பள்ளி ஆசியர்களை கௌரவித்து குழந்தைளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியை சகேலி மலர்விழி நடத்தினார். பரிசுகளை ஜெயன்ட் நிதி இயக்குநர் ரத்தின சேகர் வழங்கினார்.

தொடர்ந்து, விவிடி நிறுவனம் செந்தில்கண்ணன் மற்றும் வழக்கறிஞர் சொர்ணலதாவும் இணைந்து சி.வ.மேல்நிலை பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர். நிறைவு நாளில் தெற்கு ராஜா தெருவில் அமைந்துள்ள பால்ம் அரங்கில் நடந்த நிகழ்ச்சியிக்கு தொழிலதிபர் ஜெயகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முக்கிய விருந்தினராக நெய்வேலி அனல் மின் நிலையத்தின் முதன்மை செயற்பொறியாளர் ஆனந்தராமானுஜம் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார்.

கௌரவ விருந்தினராக லயன்ஸ் மாவட்ட தலைவர் சுரேஷ் தங்கராயப்பன் கலந்து கொண்டு ஒரு ஏழை பெண் குழந்தைக்கு லயன்ஸ் மூலம் மிதி வண்டி வழங்குவதாக அறிவித்தார். தூத்துக்குடியில் ஆயிரக்கனக்கான மரச்செடிகளை கல்லூரி மாணவர்களுடன் நட்ட பணி ஓய்வு பெற்ற காமராஜ் கல்லூரி பேராசிரியர் சீனிவாசன், 84 முறை ரத்ததானம் செய்த நிர்மலா பாலு மற்றும் துரை பாண்டியன் ஆகியோரின் சமூக சேவையை பாராட்டி பொன்னாடை போத்தி பாராட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டன.

காளிஆனந்தும் பால் பர்ணான்ட்டும் இணைந்து ஒரு ஏழை விதவைக்கு 25 கிலோ அரிசி வழங்கினர். ஜெயன்ட்ஸ் சகேலி தலைவர் கிருஷ்ணவேனி ராதாகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். ஜெயன்ட் நிர்வாக இயக்குநர் கனேசன் நன்றி கூறினார்.

Updated On: 25 Sep 2023 5:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...