/* */

ஓய்வூதியர்களுக்கு டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ்.. அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு..

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியர்களுக்கு டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் வழங்க அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஓய்வூதியர்களுக்கு டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ்.. அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு..
X

அஞ்சல் துறை மூலம் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஓய்வூதியர்களுக்கு டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் வழங்க தற்போது சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தூத்துக்குடி அஞ்சல்துறை கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

மத்திய அரசின் ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி ஆயுள் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அஞ்சல்துறையின் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டம் மூலம் பல ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் முறையில் கைரேகையை பதிவு செய்து ஆயுள் சான்று சமர்ப்பித்து பயன் பெற்று வருகிறார்கள். இந்த ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆயுள் சான்றை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க அஞ்சல் நிலையங்களில் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு, மாநில அரசு மற்றும் எந்த பொது துறைகளின் மூலம் ஓய்வூதியம் பெறுவோரும் இந்த வசதியைப் பயன்படுத்தி தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று தங்களின் இருப்பை உறுதி செய்யும் வழக்கம் இருந்து வந்தது.

மேலும், மிகவும் வயதான ஓய்வூதியதாரர்கள் பலர் உயிரோடு இருந்தும், நேரில் சென்று ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியாமல் ஓய்வூதியம் பெற இயலாமல் போகின்றது. இதனைத் தவிர்க்கும் முயற்சியாக, மத்திய அரசின் ஜீவன் பிரமான் திட்டத்தில், இந்திய அஞ்சல் துறையின் "இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி" ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வீட்டிலேயே சென்று டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக 70 ரூபாய் தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியத் துறை அலுவலகம் அல்லது ஓய்வூதிய வழங்கல் நிறுவனம் ஆகியவற்றிற்கு செல்லத் தேவையில்லை. ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், செல்போன் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் சில நிமிடங்களில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.

தபால்காரரை அணுக முடியாதவர்கள் அருகில் இருக்கும் அஞ்சலகத்திற்கு சென்று டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். அஞ்சல் நிலையங்களுக்கு செல்ல முடியாத வயதான ஓய்வூதியதாரர்கள் 0461-2377233 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்கள் இல்லங்களில் இருந்தே டிஜிட்டல் ஆயுள் சான்று சமர்ப்பிக்கும் கோரிக்கையை பதிவு செய்யலாம்.

அவ்வாறு பதிவு செய்து கொண்டால் உங்கள் பகுதி அஞ்சல் அதிகாரி அல்லது போஸ்ட்மேன் மூலம் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 15 Nov 2022 9:16 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...