/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் 777 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 777 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் 777 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

தடுப்பூசி முகாம்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் நேற்று 5-வது வாரமாக மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 2 நாட்களிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டன.

அதன்படி நேற்று முன்தினம் 791 மையங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன. நேற்று வழக்கமான மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில் 573 இடங்களிலும், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் 204 இடங்களிலும் ஆக மொத்தம் மாவட்டம் முழுவதும் 777 இடங்களில் சிறப்பு முகாம் நடந்தது. காலை முதல் நடந்த இந்த முகாம்களில் மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இந்த பணிகளில் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள், வருவாய் துறை, ஊரக மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவுப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், போலீஸ் பணியாளர்கள் உள்ளிட்ட பலதுறை அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

முகாம்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளிகளுடன் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் கொண்டு வந்து பதிவு செய்து கொண்டனர். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற முகாமை ஆணையர் சாருஶ்ரீ நேரில் ஆய்வு செய்தார்.

Updated On: 10 Oct 2021 5:17 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...