/* */

வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்புக்கு செல்லும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

HIGHLIGHTS

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடந்த முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் மே 2ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் தூத்துக்குடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணபடுகிறது.வாக்கு எண்ணும் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட உள்ளனர். இந்த ஆண்டு கொரொனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்கும் வகையில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர், வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்ள உள்ள வேட்பாளர்கள்,முகவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் தோற்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த 2 தினங்களாக அனைவரும் கொரொனா தொற்று பரிசோதனை மேற்கொண்டு பரிசோதனை முடிவின் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கைக்கு அடையாள அட்டை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினருக்கு துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என அனைவருக்கும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று கொரொனா தொற்று பரிசோதனை நடைபெற்றது.

மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜா தலைமையில் இந்த பரிசோதனை நடைபெற்றன. இந்த தொடர் பரிசோதனை முடிவின்படி வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

தடுப்பூசியை இரண்டு முறை செலுத்தி கொண்டவர்கள் கொரொனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டா மென்றும், அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருப்பின், அதற்கான ஆவணத்தை காண்பித்து வாக்கு எண்ணும் மையத்தில் செல்லலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Updated On: 30 April 2021 12:15 PM GMT

Related News