/* */

தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி கோயிலில் 17 ஆம் தேதி வருஷாபிஷேக விழா

தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ பிரத்தியங்கிராதேவி கோயிலில் வருகிற 17 ஆம் வருசாபிஷேக விழா நடைபெறுகிறது.

HIGHLIGHTS

தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி கோயிலில் 17 ஆம் தேதி வருஷாபிஷேக விழா
X

ஶ்ரீபிரத்தியங்கிராதேவி கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர். (கோப்பு படம்).

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீ சித்தர் நகரிலுள்ள ஸ்ரீ சித்தர் பீடத்தில் மஹா பிரத்தியங்கிராதேவி-மஹாகாலபைரவர், குருமகாலிங்கேஸ்வரர், மங்களம் தரும் சனீஸ்வரர், ஸ்ரீவாராஹி அம்மன், மஹா சரஸ்வதி-மகாலெட்சுமி தேவி, வீரணார், முனீஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

தென்தமிழகத்தில் மிகவும் ஆன்மிக சிறப்புபெற்றுள்ள இந்தக் கோயிலில் வருகிற 17 ஆம் தேதி (சனிக்கிழமை) வருஷாபிஷேக விழா நடைபெறுகிறது. இதுகுறித்து கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர் கூறியதாவது:

ஆன்மிக சிறப்பு வாய்ந்த ஶ்ரீ பிரத்தியங்கிராதேவி கோயில் பீடத்தில் வருசாபிஷேகத்தை முன்னிட்டு 17 ஆம் தேதி காலை 9.10மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் வருஷாபிஷேக விழா மற்றும் அமாவாசை யாக வழிபாடுகள் துவங்குகிறது. காலை 9.50மணிக்கு, நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மஹா பூர்ணாகுதியும், காலை 10.45மணிக்கு லெட்சுமிபூஜை, கோ பூஜை, கன்னிகா பூஜையும் நடக்கிறது.

தொடர்ந்து மதியம் 12.05மணிக்கு மேல் 12.55மணிக்குள் மஹாபிரத்தியங்கிராதேவி-காலபைரவர், மஹாசரஸ்வதி-மகாலெட்சுமிதேவி, குருமகாலிங்கேஸ்வரர், ஸ்ரீவாராஹி அம்மன், சனீஸ்வரர் உள்ளிட்ட பரிவாரதேவதா சமேத தெய்வங்கள் மற்றும் மூலஸ்தான வருஷாபிஷேக விழா ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் "சாக்தஸ்ரீ" சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலமாக நடைபெறுகிறது.

வருஷாபிஷேகத்தினை ஸ்ரீ சித்தர் பீடத்தின் சுவாமிகள் "சாக்தஸ்ரீ" சற்குரு சீனிவாச சித்தர் நடத்த மலேசிய தொழில் அதிபர்கள் சேகர், ராமகிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். வருஷாபிஷேகத்தினைத் தொடர்ந்து, பிரத்தியங்கிராதேவி-காலபைரவர், மஹாசரஸ்வதி-லெட்சுமிதேவி, குருமகாலிங்கேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட 16வகையான அபிஷேகம், மஹா யாகம், அலங்காரத்துடன் தீபாரதனை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மதியம் 1மணிக்கு பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்படுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் "சாக்தஸ்ரீ" சற்குரு சீனிவாசசித்தர் தலைமையில் சித்தர்பீடத்தினர், மகளிர்அணியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Updated On: 15 Jun 2023 5:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்