/* */

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - நினைவு தினம் -கனிமொழி எம்.பி அஞ்சலி.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி .

HIGHLIGHTS

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு -  நினைவு தினம் -கனிமொழி எம்.பி அஞ்சலி.
X

கனிமொழி எம்பி  உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி 

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அஞ்சலி - கனிமொழி எம்பி தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக வின் சார்பில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலக கூட்ட அரங்கில் நடந்த அஞ்சலிக் கூட்ட நிகழ்ச்சிகள் கனிமொழி எம்பி தலைமை தாங்கி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


இதைத்தொடர்ந்து கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் பேசும்போது..

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் அவரவர் கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதை முதல்வர் நிறைவேற்றி தந்துள்ளார்.

மேலும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், மத்திய புலனாய்வு துறை மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட மற்ற அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 14ஆம் தேதி ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன், முதல்வரிடம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ததன் படி ஒரு வாரத்திற்குள் அதன் மீது ஆய்வு நடத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு மீதான வழக்குகளை திரும்பப் பெறவும், வேலை வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதை மனதார வரவேற்பதுடன் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் தூத்துக்குடி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

இதைத்தொடர்ந்து முடிதிருத்தும் சவர தொழிலாளர்கள் 600 பேருக்கு அரிசிப் பைகளை கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்கள்




Updated On: 22 May 2021 6:23 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்