/* */

திருநங்கைகள் வாழ்வாதாரம் பாதிப்பு:காவல்துறை சார்பில் நிவாரண பொருட்களை எஸ்பி வழங்கினார்

கோவில்பட்டி-ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித் தொகுப்புகளை மாவட்டஎஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.

HIGHLIGHTS

திருநங்கைகள் வாழ்வாதாரம் பாதிப்பு:காவல்துறை சார்பில் நிவாரண பொருட்களை எஸ்பி வழங்கினார்
X

காவல்துறை சார்பில் திருநங்கைகள் சார்பில் நிவாரண பொருட்கள்-எஸ்பி ஜெயக்குமார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் திருமண மஹாலில் திருநங்கைகள் மற்றும் ஏழை எளிய மக்கள் 110 பேருக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித் தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று வழங்கினார்.


அப்போது அவர் பேசுகையில், கொரோனா 2வது அலையை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த 24ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் மேலும் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்து வருகிற ஜூன் 07ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த காலம் மிகவும் சிரமமாக இருக்கும். இதனை பொறுத்துக் கொண்டு விதிமுறைகளை கடைபிடித்தால்தான் கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு நம் உயிரைக் காப்பாற்ற முடியும். மேலும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும், முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும், அடிக்கடி கைகளை கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.

மேலும் அரசு நடைமுறைபடுத்தியுள்ள இந்த ஊரடங்கு உத்தரவை பொதுமக்களாகி நீங்கள் கண்டிப்பாக கடைபிடித்து ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனா தொற்றிலிருந்து நம்மை நாம் காப்பாற்றி கொள்ள முடியும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் செய்திருந்தனர். இதில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ், உதவி ஆய்வாளர் மாதவராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

Updated On: 29 May 2021 2:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  2. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  3. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    வீரர்கள் சாப்பிடும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எவை தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ - மாற்ற முடியாத மாற்றங்களை (ஏ)மாற்றமின்றி...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தைக்கு இதெல்லாம் குடுங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தையோட நோய் எதிர்ப்பு சக்தி!
  9. வீடியோ
    🔴LIVE : BJP Tamilnadu State President K.Annamalai | Press Meet...
  10. கோவை மாநகர்
    கோடநாடு வழக்கு தொடர்பாக 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை