/* */

கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டி: நியூ டெல்லி அணி சாம்பியன்

கோவில்பட்டியில் நடைபெற்ற 12 ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியில், நியூ டெல்லி ஹாக்கி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

HIGHLIGHTS

கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டி: நியூ டெல்லி அணி சாம்பியன்
X

சாம்பியன் பட்டம் பெற்ற நியூ டெல்லி ஹாக்கி அணி.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான பன்னிரெண்டாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் கடந்த 18 ஆம் தேதி முதல் நடைபெற்றது.

இதில் இந்தியா முழுவதிலும் இருந்து புகழ்பெற்ற 16 அணிகள் கலந்து கொண்டன. நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளும், காலியிறுதி, அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது. இறுதி போட்டிக்கு நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணியும், செகந்திராபாத், சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியும் தகுதி பெற்றன.

இறுதி போட்டியை கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் அருணாச்சலம் தலைமையில், இந்திய தேசிய பீல்ட் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும் அர்ஜுனா விருது பெற்றவருமான முகமது ரியாஸ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அழகிரிசாமி, ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவங்கி வைத்தனர்.

நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணியும், செகந்திரபாத், சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியும் மோதிய இறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணி இரண்டாவது இடத்தையும், நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி மூன்றாவது இடத்தையும், நியூடெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்திய அணி நான்காவது இடத்தையும் பிடித்தன.


முதலிடம் பெற்ற நியூ டெல்லி, பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணிக்கு இலட்சுமி அம்மாள் அகில இந்திய நினைவு ஹாக்கி கோப்பை மற்றும் ஒருலட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற செகந்திரபாத், சவுத் சென்ட்ரல் ரயில்வே அணிக்கு 75,000 ரூபாய் ரொக்கப் பரிசும், மூன்றாமிடம் பெற்ற நியூ டெல்லி, பஞ்சாப் நேஷனல் பேங்க் அணிக்கு 50,000 ரூபாய் ரொக்கப் பரிசும், நான்காமிடம் பெற்ற நியூ டெல்லி, காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணிக்கு 30,000 ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் நினைவு கோப்பைகளும் வழங்கபட்டன.

மேலும், காலுறுதிப் போட்டியில் விளையாடிய கோவில்பட்டி - ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் எஸ்டிஏடி அணி, சென்னை - இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் அணி, பெங்களூரு - கனரா பேங்க் அணி, சென்னை - ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்ஸைஸ் அணி ஆகிய அணிகளுக்கு ஆறுதல் ரொக்கப் பரிசாக தலா 20,000 ரூபாய் வழங்கப்பட்டது.

Updated On: 29 May 2023 3:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்