/* */

திருவாரூர் மாவட்டத்திற்கு மார்ச் 15ம் தேதி உள்ளூர் விடுமுறை

ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு மார்ச் 15ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று கலெக்டர் காயத்ரி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டத்திற்கு மார்ச் 15ம் தேதி உள்ளூர் விடுமுறை
X

திருவாரூர் ஆழித்தேர் திருவிழா பணிகள் குறித்து கலெக்டர் சத்யா ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டம் ஓடாச்சேரி பகுதியில் இருந்து பழைய வலம் வழியாக திருவாரூருக்கு புதிய வழித்தடத்தில் பஸ் சேவை துவக்கும் விழா கலெக்டர் காயத்ரி தலைமையில் நடந்தது. இதில் திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் மற்றும் முன்னாள் அமைச்சரும், தாட்கோ தலைவருமான மதிவாணன் இருவரும் இணைந்து கொடியசைத்து புதிய பஸ்சை துவக்கி வைத்தனர். தொடர்ந்து உலக புகழ் பெற்ற, ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் கட்டுமான பணி மற்றும் கமலாலயக்குளக்கரை சீரமைப்பு பணிகளை கலெக்டர் காயத்ரி மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் இருவரும் இணைந்து நேரில் பார்வையிட்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு கலெக்டர் சத்யா பேட்டி அளித்தார். அதில், கன மழையால் சேதமடைந்த திருவாரூர் கமலாலயக்குளத்தில் கரைகள் கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்த பகுதியில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் இந்த வாரத்தில் முடிவடைய உள்ளன. உலக புகழ்பெற்ற ஆழித்தேர் திருவிழாவின்போது திருவாரூர் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகள் சார்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது‌. திருவாரூர் ஆழித்தேர் திருவிழா நல்லபடியாக நடப்பதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன‌. உலக பிரசித்தி பெற்ற ஆழித்தேர் திருவிழாவை பொதுமக்கள் காண்பதற்கு வசதியாக மார்ச் 15ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் தலைவர் முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன், திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சேகர் கலியபெருமாள், திருவாரூர் நகர செயலாளர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 March 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை