/* */

பயிர்க் கடன் மோசடி காரணமாக கூட்டுறவு சங்க தலைவர் பணியிடை நீக்கம்

திருவாரூர் அருகே பயிர்க்கடன் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பயிர்க் கடன் மோசடி காரணமாக கூட்டுறவு சங்க தலைவர் பணியிடை நீக்கம்
X

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கூட்டுறவு சங்க தலைவர் ரவி.

திருவாரூர் அருகே தப்பலாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 2018 -19 ஆம் ஆண்டிற்கான விவசாய பயிர்க் கடன் தொகை சட்டவிரோதமாக வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடு நடைபெற்றதாக கூறி கூட்டுறவுசங்க உறுப்பினர்கள் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி மனு அளித்திருந்தனர். இதுதொடர்பாக திருவாரூர் மண்டல இணைப்பதிவாளர் உத்தரவின் பேரில் செயல் முறை ஆய்வு குழு விசாரணை நடத்தியது .

இதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் சங்கத்தின் தலைவர் ரவி என்பவர் தலைமையிலான நிர்வாகத்தில் முறைகேடாக பெற்ற 12 நபர்களின் பயிர் கடன் மொத்தத் தொகையான 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயில் 5 நபர்களிடமிருந்து ரூபாய் 3 லட்சத்து ஆயிரத்து 700 மட்டும் சங்க கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் வரை பயிர்க்கடன் 100 லட்சம் ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப் பட்ட நிலையில் 58 லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கு மட்டுமே சங்க உறுப்பினர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.எனவே சங்க உறுப்பினர்களின் பிரதான செயல்பாடுகளான பயிர் கடன் வழங்குவதில் நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கினை எட்டாமல் சங்க உறுப்பினர்கள் மத்தியில் நம்பிக்கை மீறல் மேலும் செய்ததாலும் சங்க நலன் கருதி சங்கத்தின் தலைவராக உள்ள ரவியை தற்காலிக பணிநீக்கம் செய்து துணைத் தலைவராக செயல்பட்டு வரும் தங்கையன் என்பவரை பொறுப்பு தலைவராக நியமனம் செய்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது அ.தி.மு.க கூட்டுறவு சங்க தலைவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 6 Nov 2021 10:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!