/* */

உலக நாடுகளிடம் சிக்கிக் கொண்டு திணறும் அமெரிக்கா

இரண்டாம் உலகப்போருக்கு பின் அமெரிக்க டாலரை உலக நாடுகளின் கரன்ஸியாக பயன்படுத்துவதை ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஒப்புக்கொண்டன

HIGHLIGHTS

உலக நாடுகளிடம் சிக்கிக் கொண்டு திணறும் அமெரிக்கா
X

பைல் படம்

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அமெரிக்க டாலரை உலக நாடுகளின் கரன்ஸியாக பயன்படுத்து என்பதை ரஷ்யா உட்பட பல நாடுகள் ஒப்புக்கொண்டன. அதற்கு வலு சேர்க்கும் விதமாக, சவூதி அரேபியா தனது கச்சா எண்ணெய் விற்பனையை அமெரிக்க டாலரில் மட்டுமே விற்க வேண்டும்.அதற்கு பிரதி பலனாக, அதற்கான பாதுகாப்பை அமெரிக்கா வழங்கும் என்பது ஒப்பந்தம்.இது சிறப்பாக போய் கொண்டிருந்தது. அதனால் அது OPEC நாடுகளுக்கும், இஸ்லாமிய நாடுகளுக்கும் தலைமையாக முடிசூடுதவற்கு அமெரிக்கா உதவியது.

சவூதி அரசருக்கு பல மனைவிகள், பலப்பல வாரிசுகள். அவர்களில் Mohammed Bin Salman (MBS) அடுத்த வாரிசாக பல முயற்சிகளுக்கு பின் முடிசூட்டுகிறார்.அவர் தந்தை மன்னராக இருந்தாலும், ஆட்சி அதிகாரம் முகம்துவிடம் செல்கிறது. அதன் பின் அவரது போக்குகளில் சில அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை. அதனால் வழக்கம்போல சவூதியில் தன் வேலையை காட்டுகிறது.

அதை செய்ய அமெரிக்க தேர்ந்தெடுத்த ஒதுவர் Jamal Shamed Khashoghi. அதில் அவர் போட்ட டுவிட் ஒன்று இளவரசரை காயப்படுத்த, அவரின் டுவிட்டர் அக்கவுண்ட் முடக்கப்படுகிறது. அந்த சூழல் அத்தோடு நிற்காது, அவரது உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்து, நாட்டிலிருந்து ஓடி விடுகிறார்.

ஓடியவர் அடைக்கலம் தேடியது துருக்கி. ஆம், சவூதியை இஸ்லாமிய நாடுகளின் தலைவராக ஏற்றுக்கொள்ளாமல், அந்த தலைமைக்கு துருக்கியும் போட்டி போடுகிறது. ஏற்கெனவே இருந்த பகை, இந்த கசோகி மூலம் மேலும் மோசமடைகிறது. இந்த சூழலில் கசோகியை மன்னித்து விட்டதாக சவூதி அரசு சமாதானத்திற்கு அழைக்க, அதை சந்தேகத்தோடு பார்க்கிறார்.ஆனால் அவரது தேவையால் துருக்கியில் இருக்கும் சவூதி எம்பஸிக்கு அக்டோபர் 13, 2018 ல் செல்கிறார்.

அவருடன் வந்த அவரது காதலியை வெளியே இருக்க சொல்லிவிட்டு, தான் வருவது தாமதமானால், தகவல் சொல்ல வேண்டியவர்கள் பற்றிய விபரங்களை பகிர்ந்துவிட்டு உள்ளே செல்கிறார்.அதாவது, தான் கொல்லப்படலாம் என்ற சந்தேகத்தோடு உள்ளே செல்கிறார். சென்றவரை, உள்ளே காத்திருந்த கூட்டம், மருத்துவ உபகரங்களால் கொன்று, 200+ பீஸ்களாக சூட்கேஸ் மூலம் அப்புறப்படுத்துகிறது.

அதே வேளையில், அவரைப்போல ஒருவரை வெளியேறி செல்வதுபோல ஜோடனை செய்து அதையும் பதிவாக்குகிறது.ஆனால் வெளியே காத்திருந்த அவரது காதலி, தனது காதலன் வராதது குறித்து, அவர் சொன்ன முக்கிய நபர்களுக்கு தகவல் சொல்லி காப்பாற்றும்படி கோருகிறார். ஆனால் அவர் சவூதிஎம்பஸியிலிருந்து வெளியே சென்றுவிட்டதாக சொன்னது. இங்கே துருக்கி எம்பஸிக்குள் ஒளித்து வைத்திருந்த கேமரா மூலம், அவர் கொல்லப்பட்டார் என்று காட்ட, சவூதி கோபத்தி உச்சத்திற்கே செல்கிறது. சவூதிக்கு தெரியும், இதன்பின்னணியில் அமெரிக்கா இருக்கிறது என்பதை. அதனால், அமெரிக்கா சவூதி இளவரசரை தண்டிக்க இதை சாதகமாக்கி காய் நகர்த்துகிறது.

ஆனால் அமெரிக்கா என்றுமே நேரடியாக அதை செய்யாமல், தன் கைத்தடிகள் மூலம் அதை முன்னெடுக்கிறது. இந்த சூழலில், உக்ரைன் போர் வருகிறது. கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர, அது வழக்கம்போல டாலர் டிமாண்ட் அதிகரித்து, புதிய டாலரை பிரிண்ட் செய்து கொள்ள அமெரிக்கா காத்திருக்கிறது. எனவே அந்த உயர்வு மற்ற நாடுகளை மட்டும் பாதிக்கும், ஆனால் அமெரிக்க புதிதாக அடிக்கும் டாலர் மூலம் தப்பித்துக் கொள்ளும்.

அப்போது ரஷ்யா மீது அமெரிக்க, நேச நாடுகள் விதித்த தடையை மீறி இந்தியா, சீனா தங்கள் சொந்த கரன்ஸியில் கச்சா எண்ணெய் வாங்க, அமெரிக்காவிற்கு அது மிகப்பெரிய பிரச்னை ஆகி, நாற்பது ஆண்டுகளில் இல்லாத பணவீக்கத்தை அது சந்திக்க நேரிடுகிறது. வழக்கம் போல, டாலர் டிமாண்ட் வேலை செய்யாததால் , OPEC நாடுகளின் தலைவனான சவூதியை, கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும்படி கேட்கிறது அமெரிக்கா.

ஆனால், அமெரிக்கா இளவரசரை தொடர்பு கொள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எடுக்கும் பல முயற்சிகள் தோல்வியில் முடிகிறது. அவரை நேரில் சந்தித்து கேட்டுக்கொண்ட முயற்சிகள் பொய்த்துப் போகிறது. இந்த நிலையில் அமெரிக்காவை பழி வாங்க, கச்சா எண்ணெய் உற்பத்தியை மேலும் 20% குறைக்கிறார் சவூதி இளவரசர்.

அது மட்டுமல்ல, சீனாவிடம் யுவானில் கச்சா எண்ணெய் விற்கவும், இந்தியாவுடன் ரூபாயில் விற்கவும் அது முன்வர, இந்த முறையை மற்ற ஓபெக் நாடுகளும் பின்பற்றலாம் என்ற சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆகவே, இதற்கெல்லாம் காரணம் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்தான் என்றும், அதற்கு OPEC+ இல் இருக்கும் ரஷ்யாவிற்கு உச்சபட்ச விலையை நிர்ணயம் செய்ய வற்புறுத்துகிறது அமெரிக்கா. ஆனால் அதுவும் சவூதியால் நிராகரிக்கப்படுகிறது.

இந்த சூழலில், வெனிசூலாவிடம் இருந்த பகையை மறந்து, அதன் மூலம் தன் தேவையை நிவர்த்தி செய்ய முயல்கிறது அமெரிக்கா. ஆனால் ஐரோப்பிய நாடுகள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகக்கூடும் என்ற சூழலில், அமெரிக்காவின் மீது அந்த நாட்டின் மக்களின் கோபம் பாய்கிறது.

இதில் நேட்டோ நாடான துருக்கியும் ரஷ்யாவுடன் ஒப்பந்தத்தை போடுகிறது. அது ஏற்கெனவே ரஷ்யாவுடன் இருக்கும் மறைபொருள் உறவை வெளிப்படையாக்க, புதிய வலதுசாரி சிந்தனை கொண்ட இத்தாலியும் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போடுகிறது. இந்த வழியை மேலும் சில நேட்டோ நாடுகள் செய்யக்கூடும் என்ற சூழலில், பிரெஞ்சு அதிபர், தாம் உக்ரைன் போரில் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது தவறெனவும், இந்தியாவின் வழியே சரியெனவும் கூறி புதிய குண்டை தூக்கிப்போட்டுள்ளார்.

நேட்டோ நாடுகளில் கடும் விரிசல் விழுந்துள்ள நிலையில், ரஷ்யாவின் கேஸ் சப்ளை பைப்பில் அமெரிக்கா ஓட்டையை போட்டுவிட்டு, யார் போட்டது என்று தெரியவில்லை, என்கிறது. ஆனால் அது ரஷ்யாவாகத்தன் இருக்கும் என்கிறது. ஆனால் இதை நாங்கள் செய்வோம் என்று ஏற்கெனவே பைடன், உக்ரைன் போருக்கு பின்பு அவர் சொல்லிய விஷயம், அதன் உண்மை முகத்தை தோலுரித்தது.

இந்த சூழலில், கடும் குளிரை நோக்கி நகரும் ஐரோப்பிய நாடுகள், ஒரு தீர்வை எட்டாத பட்சத்தில், மக்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள் என்ற நிலைக்கு மாறுகிறது. ஆம், இன்று ஐரோப்பிய மக்கள் கேட்கும் கேள்வி, இந்தியாவைப்போல அதன் மக்களின் நன்மையை பார்க்காமல், அமெரிக்காவின் கண்ணசைவுக்கு ஏன் நடனமடுகிறீர்கள் என்பது அவர்கள் கேள்வி. இதில் துருக்கி, இத்தாலி, பிரெஞ்சு என்று ஒவ்வொரு நாடாக அமெரிக்காவிற்கு எதிரே திரும்ப, உக்ரைன் போர் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல ஆகிவிட்டது.

இதெற்கெல்லாம் காரணம் இந்தியா தான் என்று, இந்தியாவில் பிரச்சினையை ஏற்படுத்த மும்மரமாக அமெரிக்கா முயற்சிக்கிறது. அதன் முதல் பகுதிதான் F-16 விமானங்களை பாகிஸ்தானுக்கு மேம்படுத்தி தருவது என கூறத்தொடங்கி உள்ளது. அடுத்து அந்த நாட்டை தீவிரவாதிகள் உதவியதற்காக கிரே லிஸ்டில் இருந்து மீட்கிறது. இதன் மூலம் அதற்கு ஐநா சபையின் கடன்கள் கிடைக்க வழி ஏற்படும். அது போன்ற முடிவுகள் இந்தியாவிற்கு பிரச்சினையில் முடியும் என்பதே அதன் எதிர்பார்ப்பு.

ஆனால் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.. என்பது போல, அது தைவானை வைத்து சீனாவை உசுப்பி விட்ட சூழலில், சீன அரசு தைவான் மீது படையெடுத்தால், இந்தியா அமெரிக்காவிற்கு உதவாது. அப்போது, சீனாவை தைவானுக்காக அமெரிக்கா தனியாக போரில் சந்திக்க நேரிடும். அது ஏற்கெனவே வீக் -காக இருக்கும் பொருளாதார சூழலில், அதை மேலும் சரிய வைக்கும். ஆனால் இதுவே ட்ரம்ப் அதிபராக இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என அமெரிக்க மக்கள் நினைக்கக்கூடிய சூழலில், இடைத் தேர்தல் பைடனுக்கு மரண அடியை கொடுக்கலாம் என கூறப்படுகிறது.

உலக நாடுகளின் ரத்தத்தை உறிஞ்சி வளர்ந்த அமெரிக்கா, தேவையில்லாமல் பல நாடுகளை ஒருசேர பகைத்துக் கொண்டது. உக்ரைனை உசுப்பி விட்ட அமெரிக்கா, இன்று அதை நட்டாற்றில் விட்டுவிட்டது. நட்பாக வளர்ந்து இந்திய உறவை, தன் சுய நலத்திற்காக பலி கொடுத்தது. தைவானை சீண்டி விட்டு, அதை தடுக்க முடியாமல் தவிக்கிறது என உலக நாடுகளிடம் சிக்கி தவிக்கிறது அமெரிக்கா..

Updated On: 25 Oct 2022 1:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  2. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  3. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  4. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  5. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  6. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  7. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
  9. நாமக்கல்
    ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
  10. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!