தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நகராட்சி சூப்பர்வைசர் கைது செய்யப்பட்டார்

தேனியில் தீக்குளிக்க முயன்ற நகராட்சி சூப்பர்வைசர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நகராட்சி சூப்பர்வைசர் கைது செய்யப்பட்டார்
X

நகராட்சி கமிஷனர் சந்திக்க மறுத்து விட்டாராம்... தீக்குளிக்க முயன்ற தேனி நகராட்சி சூப்ரவைசர் கைது

புதியதாக பொறுப்பேற்ற நகராட்சி கமிஷனர், தன்னை சந்திக்க மறுத்து விட்டார் என புகார் எழுப்பி, தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற, நகராட்சி சூப்ரவைசரை தேனி போலீசார் கைது செய்தனர்.

தேனி நகராட்சி கமிஷனராக சுப்பையா என்பவர் இன்று பொறுப்பேற்றார். பின்னர் வழக்கமான பணிகளை முடித்த பின்னர், அலுவலக பணியாளர்கள் ஒவ்வொருவராக சென்று கமிஷனருக்கு வாழ்த்து தெரிவித்தனர். நகராட்சியில் சூப்ரவைசராக பணிபுரியும் சி.நடராஜன் என்பவரும் சந்திக்க சென்றுள்ளார். அந்த நேரம் பார்த்து அவசர வேலையாக கமிஷனர் வெளியே புறப்பட்டு விட்டார்.

உடனே, கமிஷனர் தன்னை சந்திக்க மறுத்து அவமானப்படுத்துகிறார் என புகார் கூறியபடி நடராஜன், தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த, போலீசார் தடுத்து நிறுத்தி நடராஜனை கைது செய்து, ஸ்டேஷன் ஜாமீனில் விடுவித்தனர். இப்படியெல்லாம் காரணம் கூறி தீக்குளிக்க முயற்சித்து அதிகாரிகளை மிரட்டுவார்களா? என நகராட்சி அதிகாரிகள் மன வேதனை தெரிவித்தனர்.

Updated On: 21 July 2021 2:30 PM GMT

Related News