/* */

வைகை அணையிலிருந்து பென்னிகுவிக் மண்டபம் வரை விவசாயிகள் இருசக்கர வாகன பேரணி

வரும் டிசம்பர் 5 -ஆம் தேதி வைகை அணை முதல் பென்னிகுவிக் மண்டபம் வரை இருசக்கர வாகன பேரணி நடத்தப்படுமென விவசாயிகள் தகவல்

HIGHLIGHTS

வைகை அணையிலிருந்து  பென்னிகுவிக் மண்டபம் வரை விவசாயிகள்  இருசக்கர வாகன பேரணி
X

முல்லை பெரியாறு அணை பைல் படம்.

''முல்லை பெரியாறு அணையை காப்போம்'' என்ற முழக்கத்துடன் வைகை அணையில் இருந்து பென்னிகுவிக் மண்டபம் வரை 60 கி.மீ., துாரம் டிசம்பர் 5ம் தேதி இருசக்கர வாகன பேரணி நடக்கிறது என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்., தேவர், முதன்மை செயலாளர் இ.சலேத்து, ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம், பொதுச்செயலாளர் பொன்காட்சிக்கண்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது:

#save_mullaiperiyar_dam என்கிற முழக்கத்தை முன்னிறுத்தி வரும் டிசம்பர் 5 ஆம் தேதி காலை 9 மணி அளவில்...ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமையில் தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்துஇருசக்கர வாகன பேரணி தொடங்குகிறது.

இந்த பேரணி கானா விலக்கு, தேனி, வீரபாண்டி, கோட்டூர், சீலையம்பட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி, கம்பம், கூடலூர் லோயர் கேம்ப் வழியாக 60 கி.மீ. தொலைவுக்கு பயணித்து கர்னல் பென்னி குயிக் மணிமண்டபத்தில் நிறைவடைகிறது. #decommissionmulapperiyar என்கிற முழக்கத்தை முன்னிறுத்தி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஒட்டுமொத்த கேரளத்தையும் பதற்றத்தில் ஆழ்த்தி இருக்கும். #save kerala brigade என்கிற அமைப்பை தடை செய்யவும்,பொய் தகவல்களை வெளியிட்டு மக்களை பீதியில் ஆழ்த்தும், ரசல் ஜோயினை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கோரியும், அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து, ஐந்து மாவட்ட விவசாய சங்கம் நடத்தும் இந்த இரு சக்கர வாகன பேரணி யில்... கலந்து கொள்ள வருமாறு ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கும் அறைகூவல் விடுக்கிறோம்.

சமூக விலக்கம், சுயகட்டுப்பாடு, முகக் கவசம், தலைக்கவசம், இரு சக்கர வாகனத்தின் அசல் உரிமங்கள், ஓட்டுனர் உரிமம்,உள்ளிட்ட அனைத்தும் அவசியம். ஒரு இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் பயணித்தால் கண்டிப்பாக இருவரும் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முழக்கங்கள், பதாகைகள் அனைத்தும் ஐந்து மாவட்ட சங்கத்தால் இறுதி செய்யப்பட்டவையே. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கட்டுப்பட்டு கலந்து கொள்ள விரும்புபவர்கள் மட்டும் வரவும்...அரசியல் கட்சி கொடிகளுக்கு, பிற இயக்க கொடிகளுக்கு அனுமதி கிடையாது. மாமனிதர் கர்னல் பென்னிகுவிக் உருவம் பொறித்தஐந்து மாவட்ட சங்கத்தின் கொடிக்கு மட்டுமே அனுமதி.முல்லைப் பெரியாறு அணையை காக்க விரும்பும் அனைவரையும் அறைகூவல் விடுத்து அழைக்கிறோம் என அவர்கள் கூறியுள்ளனர்.

இருசக்கர வாகனப் பேரணி தொடர்பான நிகழ்ச்சி நிரல் மற்றும் தொடர்பு எண்கள்

நாள்-05-12-2021 ஞாயிற்றுக்கிழமை, நேரம்-காலை 9 மணி. துவங்கும் இடம்-வைகை அணை.நிறைவிடம்-மாமனிதர் கர்னல் பென்னிகுயிக் மணிமண்டபம்-லோயர்கேம்ப். தொடர்புக்கு-9962366666,9789379077,9787292101,9788974105,9159479300,9751410977,9080890408

Updated On: 29 Nov 2021 3:25 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  4. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  5. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  6. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  7. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  8. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  9. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  10. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்