விவசாய கல்லூரி அமைத்து தருவேன் - அதிமுக வேட்பாளர்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விவசாய கல்லூரி அமைத்து தருவேன் - அதிமுக வேட்பாளர்
X

தேர்தலில் தான் வெற்றி பெற்றால் விவசாய கல்லூரி ஆராய்ச்சி மையம் அமைத்து தருவேன் என கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளர் கூறினார்.

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சையது கான், கம்பம் நகர் பகுதியில் காளியம்மன் கோவில் தெரு, செல்லாண்டி அம்மன் கோவில் தெரு, காந்திநகர், அம்பேத்கர் காலனி ஆகிய பகுதிகளில் கூட்டணிக் கட்சி தொண்டர்களுடன் வாக்கு சேகரித்தார்.அப்போது கம்பம் பகுதியில் விவசாய கல்லூரி மற்றும் விவசாய ஆராய்ச்சி மையம் கண்டிப்பாக தொடங்குவேன் என வாக்குறுதி கூறி பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளரை பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்க, பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக பொதுமக்கள் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் அதிமுக கம்பம் நகர செயலாளர் ஜெகதீசன், கம்பம் எம்எல்ஏ, ஜக்கையன் மற்றும் கூட்டணி கட்சிகளான பாஜக, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் போன்ற கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சையது கானுக்கு வாக்கு சேகரித்தனர்.

Updated On: 2021-03-25T16:00:07+05:30

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000. கிடைக்கும்? கசிந்த தகவல்
 2. சினிமா
  யார் அந்த கீ? அசோக் செல்வனின் காதல் மனைவியாகும் நடிகை!
 3. சினிமா
  ரஜினி நிராகரித்த கதையில் இணையும் சிம்பு - கமல்ஹாசன்!
 4. சினிமா
  திரிஷ்யம் 3 - ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் ரிலீஸ்?
 5. திருவில்லிபுத்தூர்
  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது: டிஜிபி சைலேந்திர பாபு
 6. உசிலம்பட்டி
  உசிலம்பட்டி அருகே ரத்த தானம், இலவச மருத்துவ ஆலோசனை முகாம்
 7. சினிமா
  கமல் படத்தில் இணையும் அஜித் விஜய்.. இயக்குவது நம்ம லோகேஷ்!
 8. உசிலம்பட்டி
  உசிலம்பட்டி அருகே பாலை சாலையில் ஊற்றி போராட்டம்
 9. சினிமா
  மஞ்சக்காட்டு மைனா... நடிகை ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் வைரல்
 10. நாமக்கல்
  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் பூசாரிகள் பேரவை...